குடியாத்தம் ப்ளஸ1 பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை ! போலீசார் விசாரணை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 செப்டம்பர், 2026

குடியாத்தம் ப்ளஸ1 பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை ! போலீசார் விசாரணை !

குடியாத்தம்  ப்ளஸ1 பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை ! போலீசார் விசாரணை !
 குடியாத்தம் , செப்டம்பர் 4 -
                 வேலூர் மாவட்டம் குடியாத்தம்
,பிச்சனூர் பேட்டை குதியை சேர்ந்தவர் ஞான பிரகாசம் . இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி யாற்றி வருகிறார் இவருக்கு  2 மகன்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் கிஷோர்( வயது 16 ). அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ப்ளஸ் 1 படித்து வந்தார்.இதனிடையே நேற்று பள்ளி விடுமுறை நாள் என்பதால் காலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற கிஷோர் மாலை நீண்ட நேரம் கழித்து வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்  அப்பொழுது அவ ரது பெற்றோர் இது குறித்து கிஷோரிடம் கேட்டு கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது‌ இதனையடுத்து மனம் உடைந்த கிஷோர் வீட்டில் ஒரு அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு ள்ளார்.நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அவரது பெற்றோர் அறையில் சென்று பார்த்த பொழுது பேனில் தூக் கிட்டு இறந்த நிலையில் கிடந்த கிஷோ ரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென் றனர் . அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர்  ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதை யடுத்து பிரேத பரிசோதனைக்காக கிஷோரின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது .இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad