திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், ராந்தம் துரைராஜ் நகர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடு முற்றிலும் எரிந்து சேதமடைந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
ராந்தம் துரைராஜ் நகர் பகுதியில் நேற்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் குடியிருப்பு வீடு ஒன்று முற்றிலும் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த ஆவணங்கள், உடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகின. இதனால் குடும்பத்தினர் தங்களது உடமைகளை இழந்து பெரும் துயரத்திற்கு ஆளாகினர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தமிழக வெற்றிக் கழகத்தின் திருவண்ணாமலை கிழக்கு மாவட்டச் செயலாளர் எம். உதயகுமார், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி கே. மோகன், வெம்பாக்கம் வடக்கு ஒன்றியச் செயலாளர் எம். சதீஷ்குமார் ஆகியோர் தீ விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவர்களின் உடனடித் தேவைகளைக் கருத்தில் கொண்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
இந்நிகழ்வில் ஒன்றியச் செயலாளர்கள் பாரதி, முகுந்தன், விநாயகம், சந்தோஷ், சேது, நாகேந்திரன், லட்சுமி, கோகுல் உள்ளிட்ட வெம்பாக்கம் வடக்கு ஒன்றிய மற்றும் ராந்தம் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு துயரமான நேரத்தில் நேரில் சென்று ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கிய தவெக நிர்வாகிகளின் இந்தச் செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கோ.பாபு
திருவண்ணாமலை
மாவட்ட செய்தியாளர்
9843780102
வி.ஜெகன்
திருவண்ணாமலை மாவட்டம் ஒளிப்பதிவாளர்
9894381487
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக