விநாயகர் சதுர்த்திக்காக மரத்தில் ஏறி சீரியல் விளக்குகள் அமைத்த போது மின்சாரம் தாக்கி இருவர் படுகாயம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 செப்டம்பர், 2026

விநாயகர் சதுர்த்திக்காக மரத்தில் ஏறி சீரியல் விளக்குகள் அமைத்த போது மின்சாரம் தாக்கி இருவர் படுகாயம் !

விநாயகர் சதுர்த்திக்காக மரத்தில் ஏறி சீரியல் விளக்குகள் அமைத்த போது மின்சாரம் தாக்கி இருவர் படுகாயம் !
காட்பாடி , செப்டம்பர் 14 -
வேலூர் மாவட்டம் காட்பாடி விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மின் விளக்குகள் அமைப்பதில் ஏற்பட்ட  மின் கசிவால் மரக்கிளையில் சுயநினைவின்றி சிக்கிய வாலிபர் – 2 மணி நேரம் போராடி உயிரை மீட்ட தீயணைப்புத் துறையினர் மீட்பு
வாகனங்கள், மக்கள் நடமாடும் பொது இடங்களில் அதிகரிக்கும் வண்ண விளக்கு மின்சார விளையாட்டுகள் - வேடிக்கை பார்க்கும் உயர் பதவி ஊழியர் கள் வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக மரத் தின் மீது ஏறி சீரியல் விளக்குகளுக்கான ஒயர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் கூலித் தொழிலாளர்கள் இருவர் படுகாயமடைந் தனர். இதில் ஒருவர் மின்சாரம் தாக்கிய தில் சுயநினைவிழந்து மரக்கிளையில் சிக்கிக்கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிருக்கு ஆபத்தான நிலையில் மரக்கிளையில் சிக்கியிருந்த வாலிபரை மீட்க சுமார் இரண்டு மணி நேரம் போராடினர். பின் னர் அவரை பத்திரமாக மீட்டு, மின்சாரம் தாக்கிய இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விழாக்காலங்களில் விதிமீறல்கள் தொடர்வதாக புகார் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளின்போது, அரசியல் கட்சி நிகழ்ச்சிகள், அரசியல் கட்சி கல்யாண நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளில் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலை கள், கிராமப்புற சாலைகள் மற்றும் பொது மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் அனுமதியின்றி கொடிகள், பேனர்கள், மின் விளக்குகள் மற்றும் மின் ஒயர்கள், வாகனங்களில் சிக்கும் வகையில் தலை களில் அடிபடும், மக்கள் மீதுவாகனத்தின் மீது இரும்பு கம்பிகளின் மீது சைக்கிளின் மீது கரண்ட் உரசும் வகையில் அமைக்கப் படுவதாக பொதுமக்கள் தரப்பில் தொடர் ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக மின்கம்பங்கள், சாலையோர மரங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாடும் இடங்களில் சீரியல் விளக்குகள் மற்றும் மின் ஒயர்கள் முறையின்றி அமைக்கப் படுவதால், மிகவும் நலிவடைந்து எலும் புக்கூடான மின்சார கம்பங்கள் தாழ்வான மின்சார ஒயர்கள், மின்சாரம் தாக்குதல், ஒயர்கள் அறுந்து விழுதல், வாகன ஓட்டி களுக்கு இடையூறு ஏற்படுதல் உள்ளிட்ட பல்வேறு அபாயங்கள் உருவாகும் சூழல் உள்ளது. மின்சாரத் திருட்டு மற்றும் அதிகாரிகள் கண்காணிப்பு குறித்து விசாரணை தேவை விழாக்காலங்களில் சில இடங்களில் உரிய அனுமதியின்றி மின்சாரம் பயன்படுத்தப்படுவதாகவும், மின்சார இணைப்புகள் முறையாக பாதுகாப்புடன் வழங்கப்படுகிறதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்ற னர். மின்சாரத் திருட்டு தொடர்பாக மின் சாரச் சட்டம், 2003-ன் பிரிவு 135-ல் தண் டனை விதிகள் உள்ளன. மேலும், மின் சாரத் திருட்டை அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் தெரிந்தே அனுமதிப்பது, உடந்தையாக இருப்பது அல்லது மறைப் பது போன்ற செயல்கள் குறித்து பிரிவு 150-ன் கீழ் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழிவகை உள்ளது.அதேபோல், மின்கம்பி கள் மற்றும் மின் இணைப்புகள் பொது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மத்திய மின்சார ஆணையத்தின் பாதுகாப்பு விதிமுறைகளும் வலியுறுத்துகின்றன.
இதனால், காட்பாடி அருகே நடைபெற்று ள்ள இந்த சம்பவத்தில் மின்சாரம் எவ் வாறு பெறப்பட்டது, அதற்கான உரிய அனுமதி பெறப்பட்டிருந்ததா, இது போன்ற செயல்களுக்கு அனுமதி மறுப்பு வேண்டும், மின் இணைப்பு பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு அமைக் கப்பட்டிருந்ததா, சம்பந்தப்பட்ட அதிகாரி களின் கண்காணிப்பு இருந்ததா என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். கையூட்டு குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்த கோரிக்கை
மேலும், திருவிழா காலங்களில் விதி மீறல்களை அதிகாரிகள் கண்டும் காணாமல் விடுவதாகவும், சில இடங் களில் கையூட்டு பெற்றுக்கொண்டு சட்டவிரோத மின் இணைப்புகள் மற்றும் அலங்காரங்களுக்கு அனுமதி வழங்கப் படுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள்தெரிவிக்கப்படுகின்றன
இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம், காவல். துறை, நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த்துறை மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள் இணைந்து விசாரணை நடத்த வேண்டும். குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரி கள் மற்றும் விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் இனி வரும் நாட்களில் இதுபோன்ற விபத் துகள் நடைபெறாமல் இருக்க, திருவிழாக் கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு முன்பாக சாலைகள், மின்கம்பங்கள், மரங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் அமைக்கப்படும் அலங்காரங் கள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து ஆய்வு செய்ய வேண்டும்.அனுமதியின்றி மின் ஒயர்கள் அமைத்தல், மின்கம்பங்களில் அல்லது சாலையோரங்களில் ஆபத்தான முறை யில் சீரியல் விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட விதிமீறல்களை உடனடியாக அகற்றுவதுடன், மின்சாரப் பாதுகாப்பு விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவ டிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சூழ்நிலைகளில் அவர்களிடம் நாம் ஏதே னும் கேள்விகள் கேட்டால் நிகழ்ச்சி நடத் தக் கூடாதா என கூறுவதும் கூடுதலாக இவர் தான் கம்ப்ளைன்ட் செய்கிறார் என ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் தகவல் தந்த அவருக்கு நெருக்கடிகளை உருவாக்குகின்றனர். காட்பாடி அருகே மின்சாரம் தாக்கியபோது, மரக்கிளையில் சுயநினைவின்றி சிக்கியிருந்த வாலி பரின் உயிரை மீட்க சுமார் இரண்டு மணி நேரம் போராடிய காவல்துறை, தீயணைப் புத் துறையினரின் பணியை பொது மக்கள் பாராட்டியுள்ளனர். உரிய நேரத் தில் துரிதமாக செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய தீயணைப்புத் துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட மீட்புப் பணியாளர் களுக்கு பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவத்தை ஒரு எச்சரிக்கை நிகழ்வாகக் கருதி, மாவட்ட ஆட்சியர் பி எஸ் லீலா,, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதி காரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, எதிர்காலத்தில் இதுபோன்ற உயிருக்கு ஆபத்தான விதிமீறல்கள் நடை பெறாத வகையில் கடுமையான கண்காணிப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பு: இது போன்ற குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க முன்கூட்டியே தகவல் தருபவர்களின் ரகசியத்தை காக்க வேண்டும் இல்லையெனில் மாவட்ட நிர் வாகத்தின் மீது வழக்கு தொடரப்படும் என சமூக உணர்வுமிகு சட்ட வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad