அரசுப் பள்ளி ஆசிரியர் தன் பணிபுரியும் மலை கிராமத் திற்கு 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆம்புலன்ஸ் வழங்கல் !
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு கொத்த பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தினகரன் என்பவர் பேரணாம் பட்டு, பாஸ்மார் பெண்டா மலை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சுமார் 18 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்
இந்த மலை கிராமத்தில் பாஸ்மார் பெண் டா அரவட்லா, கொத்தூர் உள்ளிட்ட கிரா மங்களில் போதிய போக்குவரத்து வசதி கள் இல்லாததாலும் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் இருப்ப தை அறிந்த அரசுப் பள்ளி ஆசிரியர் தின கரன் தனது சொந்த செலவில் அந்த மலை கிராம மக்களுக்கு சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆம்புலன்ஸை வழங் கினார் அந்த ஆம்புலன்ஸை குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் சிந்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து குடியாத் தம் சட்டமன்ற உறுப்பினர் அப்பகுதி பொது மக்களிடம் பேசும்போது தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வழங்கிய அரசு பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித்தனர் மலை கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய அரசு பள்ளி ஆசிரியரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். குறிப்பு: கடந்த 2023 ஆம் ஆண்டு அரசு பள்ளி ஆசிரியர் தினகரன் மலை கிராமத்தில் உள்ள மாணவர்களை தனது சொந்த செலவில் தினந்தோறும் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக