ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் இன்றி, பணி பாதுகாப்பு உறுதிபடுத்த வேண்டும்" மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரைக் கண்டித்து ஜாக்டோ சார்பில் ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் இன்றி, பணி பாதுகாப்பு உறுதிபடுத்த வேண்டும்" மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரைக் கண்டித்து ஜாக்டோ சார்பில் ஆர்ப்பாட்டம்!

ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் இன்றி, பணி பாதுகாப்பு உறுதிபடுத்த வேண்டும்" மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரைக் கண்டித்து ஜாக்டோ சார்பில் ஆர்ப்பாட்டம்!
ராணிப்பேட்டை, செப்டம்பர். 6 -
      இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம். மோகனா என்பவ ரின் செயல்பாடுகளைக் கண்டித்து, ஆசி ரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு(ஜாக்டோ)சார்பில்ஞாயிற்றுக்கிழமை (செப். 6) முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற் றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட  ஜாக்டோ ஒருங்கிணைப்பாளர்கள் செ. சரவணன் மற்றும் து. கார்த்திகேயன் ஆகியோர் கூட்டு தலைமை தாங்கினர்.
இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம். மோகனா, மாவட் டத்தின் கல்வி வளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களைத் தரக்குறைவாகப் பேசி, அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்வ தாகவும் நிர்வாகிகள் குற்றம்சாட்டினர். மேலும், "நான் சொல்வதை மட்டுமே செய்ய வேண்டும்" என்ற சர்வாதிகாரப் போக்கிலும், ஹிட்லர் பாணியிலும் மாவட்ட கல்வித்துறையை அவர் வழி நடத்த முயல்வதாகத் தெரிவித்தனர்.
ஆசிரியர்களின் கண்ணியத்தைக் குறை க்கும் வகையிலும், கல்விச் சூழலைப் பாதிக்கும் வகையிலும் செயல்படும் முதன்மைக் கல்விஅலுவலர்எம்.மோகனா மீது தமிழ்நாடு அரசும், பள்ளிக் கல்வித் துறையும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட 20 அம்ச ஆசிரி யர் விரோத நடவடிக்கைகள் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவன தலைவர் அ. மாயவன் துவக்கி வைத்து பேசினார். அரசு ஊழி யர் சங்க மாவட்ட தலைவர் எம். எழில் இளம்வழுதி, மாவட்ட செயலாளர். வி. பர்சிலா வான சாஸ்திரி ஆகியோர் ஆர்ப் பாட்டத்தை வாழ்த்தி பேசினார்கள்.
தொடர்ந்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் சே. நீலகண்டன், ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கு. தியாகராஜன், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் மூ. மணிமேகலை, முது கலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் பி. அன்பழகன், ஆசி ரியர் கழக மாநில தலைவர் சி. ஜெயக் குமார், தமிழாசிரியர் கழகம் மாநிலத் துணைச் செயலாளர் வா. இராமமூர்த்தி உள்ளிட்ட சங்கத்தின் மாவட்ட தலைவர் கள், செயலாளர்கள் ஆகிய கண்டன உரையாற்றி முழக்கங்களை எழுப்பினர்

 ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad