ஆரி ஓர்க் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்கம்
வடக்கூர், அக்.2– குலசேகரப்பட்டணம் சேகரம், வடக்கூர் தூய யோவான் ஸ்நானகர் ஆலயம் சார்பில் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் பெண்களுக்கான ஆரி ஓர்க் பயிற்சி இன்று தொடங்கியது.
ஆரம்ப நிகழ்ச்சியில் ஜெபக்கனி பாஸ்கரன் ஆரம்ப ஜெபம் செய்தார். சர்வதேச பயிற்சியாளர் ஜெமி செல்வின் வரவேற்று தேவிபாய் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். நிகழ்ச்சியில் சேகரகுருவானவர் பாஸ்கரன் ஜெபித்து பயிற்சியை தொடங்கி வைத்தார். சர்வதேச பயிற்சியாளர் ஜெமி செல்வின் பயிற்சியை வழங்கினார்.
இந்தப் பயிற்சி அக்டோபர் 2-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை முதல் கட்டமாக 3 நாட்கள் நடைபெறுகிறது. தொடர்ந்து அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் மேலும் 12 பயிற்சி அமர்வுகள் நடைபெற உள்ளன.
பெண்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டு, வீட்டிலிருந்தபடியே தொழில் செய்து வருமானம் ஈட்டுவதற்கும், குடும்பத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும் இந்தப் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆரி ஓர்க் பயிற்சியில் பெண்களுக்கு நடைமுறை பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், பயிற்சி நிறைவில் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. மேலும் பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது.
பெண்களின் திறன் மேம்பாடு, சுயதொழில் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு அப்பகுதி பெண்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த பயிற்சி ஏற்பாடுகளை வடக்கூர் தூய யோவான் ஸ்நானகர் ஆலய பொறுப்பாளர்கள், சேகர கமிற்றியினர் சிறப்பாக செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக