குடியாத்தம் அருகே பழையசிக்கன் ரைஸ் சாப்பிட்ட. 4 குடும்பத்தினருக்கு வயிற்றுப் போக்கு சட்டமன்ற உறுப்பினர் நேரில் சந்திப்பு !
குடியாத்தம் ,செப்டம்பர் 19 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மேல் ஆலத்தூர் மதுரா நத்தமேடு கிராமத் தில் 18/09/2026 வெள்ளிக்கிழமை அன்று இக் கிராமத்தில் வசித்து வரும்நான்கு குடும்பத்தினர்கள் 1.செல்வம் த/பெ முனிசாமி (வயது 56) 2 தினகரன் த/பெ சுரேஷ்பாபு (வயது 29)3.சுரேஷ் பாபு த/பெ வெங்கட்டன்(வயது 56) 4 மகாலட்சுமி
த/பெ செல்வம் (வயது 20) 5.லலிதா க/பெ சுரேஷ்(வயது 45) 6 வண்ணமதி க/பெ பார்த்திபன் (வயது 22) 7 தீபா க/பெ
நிர்மல் குமார் (வயது 35) மொத்தம் ஏழு நபர்கள் ( ஆண்கள்-03 பெண்கள்-04 ) அவர்களின் வீட்டில் இருந்த சிக்கன் ரைஸ் பழைய உணவுகளையும் குடி நீரை யும் சாப்பிட்டு உள்ளதின் காரணத்தி னால் நேற்று காலை வேளை சுமார் 11 மணியளவில் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டதினால் செல்வம் மற்றும் தினகரன் நேற்று 18/09/2026 வெள்ளிக் கிழமை கூடநகரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்து விட்டனர் அன்றைய தினமே இரவு 10 மணியளவில் அவர்களின் குடும்பத் தைச் சேர்ந்த மகாலட்சுமி த/பெ செல்வம் (வயது 20) மற்றும் தீபா க/பெ நிர்மல் குமார் (வயது 35) வாந்தி மற்றும் வயிற் றுப்போக்கின் காரணத்தினால் இரவு சுமார் 11 மணி அளவில் ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு பொது மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு இரு நபர்களும் சிகிச் சை பெற்று திரும்பி விட்டனர் மேலும் இன்று (19/09/2026) சனிக்கிழமை காலை யில் மேற்கூறிய அனைத்து நபர்களும் (7நபர்களும்) அரசு பொது மருத்துவ மனை குடியாத்தத்தில் அனுமதிக்கப்பட்டு தற்போது மருத்துவர்கள் கண்காணிப் பில் உள்ளனர் நல்ல நிலையில் உள்ள னர் மேலும் இன்று முழுவதும் சிகிச்சை கண்காணிப்பில் இருப்பார்கள் என மருத்துவர் மற்றும் செவிலியர்கள் தெரி வித்தனர்
இந்நிகழ்வு தொடர்பாக இன்று (19/09/2026) காலை முதல் சுகாதாரத் துறை உடன் உள்ளாட்சி பிரதிநிதிகளும் அரசு அலுவலர்களும் அங்குள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில்உள்ள குடிநீரை ஆய்வு செய்து வருகின்றனர் மேலும் சுகாதாரதுறையினர் சீர்க்கேடு ஏற்படுவதற்கான பழைய உணவு மற்றும் குடிநீரை மாதிரியை சேகரித்து எடுத்துக் கொண்டு பரிசோதிக்க ஆய்வகத்திற்கு எடுத்து சென்றுள்ளனர் மேலும் இந்த நிகழ்வு தொடர்பாக நத்தமேடு கிராமத் தில் மதிப்பிற்குரிய K.V. குப்பம் சட்டமன்ற உறுப்பினர் இ.தென்றல் குமார் ஆய்வு செய்தார்
குடியாத்தம் தாலுகா செய்தி அலர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக