குடியாத்தம் ரோட்டரி சங்கம் காது கருவி மையம் இணைந்து பெரிய சங்கம் வளா கத்தில் செவித் திறன் பரிசோதனை முகாம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 19 செப்டம்பர், 2026

குடியாத்தம் ரோட்டரி சங்கம் காது கருவி மையம் இணைந்து பெரிய சங்கம் வளா கத்தில் செவித் திறன் பரிசோதனை முகாம் !

குடியாத்தம் ரோட்டரி சங்கம் காது கருவி மையம் இணைந்து  பெரிய சங்கம் வளாகத்தில் செவித்திறன் பரிசோதனை முகாம் !
குடியாத்தம். செப்டம்பர் 19 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி சங்கம், காது கருவி மையம் சென்னை இணைந்து ஏற்பாடு செய்த செவித்திறன் பரிசோதனை முகாம் ரோட்டரி சங்க கட்டி டத்தில் 19/ 9 /26 சனிக்கிழமை காலை 9 மணி முதல் முற்பகல்  1 மணி வரை சிறப் பாக. நடைபெற்றது ரோட்டரி சங்கத் தலைவர் டி. எஸ். ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர்கள் டாக்டர் எம். எஸ். திருநாவுக்கரசு, என்.சத்தியமூர்த்தி, ஏ. மேகராஜ்,சி. கே. வெங்கடேசன், ஆர். கே.மகாலிங்கம், கண்ணன், கே சந்திரன் , மருத்துவப் பணி இயக்குனர் பி எல் என் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்
முகாமில் செவித்திறன் ஆய்வாளர்கள் தியாகராஜன், விஷ்ணு ராஜ், செவியியல் நிபுணர் தூயவன், பேச்சுப் பயிற்சியாளர் ஹரிணி ஆகியோர் கலந்துகொண்டு 72 பேருக்கு செவித்திறன் பரிசோதனை ஆய்வு செய்து மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள் மேலும் 25 பேருக்கு காது கேள் கருவி பரிந்துரைக் கப்பட்டது. இம்முகாமுக்கான ஏற்பாடுகளை முன்னாள் தலைவர் டி என். ராஜேந்திரன்  செய்திருந்தார். மேலும் இம்முகாமில் உறுப்பினர்கள் மதியழகன் பிரஸ் தமிழ்ச்செல்வன், டி. சி.ஜெகநாதன், ஆசிரியர் சம்பத்,ஜெயச்சந்திரன், வேலு,கே. எம். ராஜேந்திரன், அன்பரசன், யுவராஜ், சுரேஷ், அருண்குமார் ஆகி யோர் கலந்து கொண்டார்கள். இறுதியில் செயலாளர் ஜெ. தமிழ்ச்செல்வன் நன்றியுரை ஆற்றினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேபி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad