புரட்டாசி முதல் சனிக்கிழமை: பிச்சனூர் தென்திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயிலில் பால்குட ஊர்வலம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 19 செப்டம்பர், 2026

புரட்டாசி முதல் சனிக்கிழமை: பிச்சனூர் தென்திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயிலில் பால்குட ஊர்வலம் !

புரட்டாசி முதல் சனிக்கிழமை: பிச்சனூர் தென்திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயிலில் பால்குட ஊர்வலம் !
 குடியாத்தம், செப்டம்பர் 19 -
      வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே புகழ்பெற்ற பிச்சனூர் அருள்மிகு தென் திருப்பதி வெங்கடேச பெருமாள் திருக் கோயிலில், புரட்டாசி முதல் சனிக்கிழமை யை முன்னிட்டு பால்குட ஊர்வலம் சிறப் பாக நடைபெற்றது.பால்குட ஊர்வலத்தை கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செய லாளர் கே.எம்.ஜி. ராஜேந்திரன், வழக்கறி ஞர் கே.எம். பூபதி மற்றும் கம்பன் கழக நிறுவனர் ஜே.கே.என். பழனி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.இந்த நிகழ்வில் திருக்கோயில் நிர்வாகிகள் மணி, தட்சி ணாமூர்த்தி, பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் ஏந்தி, சுவாமியை வழிபட்டு அருள் பெற்றனர்.

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர்கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad