குடியாத்தத்தில் இருசக்கர வாகனங்கள் திருடிய. 2 பேர் கைது. அவர்களிடமிருந்து 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 24 செப்டம்பர், 2026

குடியாத்தத்தில் இருசக்கர வாகனங்கள் திருடிய. 2 பேர் கைது. அவர்களிடமிருந்து 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் !

குடியாத்தத்தில் இருசக்கர வாகனங்கள் திருடிய. 2  பேர் கைது. அவர்களிடமிருந்து 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் !
 குடியாத்தம். செப்டம்பர் 24 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம், சித்தூர் கேட், லட்சுமணபுரம் மற்றும் புறவழி சாலை ஆகிய பகுதிகளில் நகர காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளர் தரணி பரிவர்த் தம் மற்றும் போலீசார்.வாகன தணிக்கை யில் ஈடுபட்டிருந்தனர், அப்போது அந்த வழியாக. ஒரே டூவீலரில் வந்த இரண்டு பேரை நிறுத்தி  இருசக்கர வாகனத்தின் ஆவணங்களை கேட்டுள்ளார்கள் அவர் களிடம்  உரிய ஆவணங்கள் இல்லாத தால் தீவிர விசாரணைமேற்கொண்டனர்.
விசாரணையில் குடியாத்தம் அடுத்த
 லிங்குன்றம் கணபதி நகர் பகுதியை சேர்ந்த நேதாஜி. த/பெ. கிருஷ்ணன் (வயது 38)  பேர்ணாம்பட்டு  அம்பேத்கர் நகர் பங்களா மேடு நடுத் தெரு பகுதி யைச் சேர்ந்த சந்தோஷ். த/பெ. கோவிந் தசாமி (வயது 24). என்பதும் இவர்கள் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் என்பது தெரிய வந்தது.
 மேலும் இவர்கள் குடியாத்தம் கே வி குப்பம் பேரணாம்பட்டு உள்ளிட்ட பல இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட வந்தவர்கள் என்று ம் திருடப்பட்ட வாகனங்களை தங்களது வீட்டில் மறைத்து வைத்திருப்பதும் தெரிய வந்தது.இதை எடுத்து வீட்டில் மறைத்து வைத்திருந்த இருசக்கர வாகனங்கள் உட்பட மொத்தம் 10  இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர் இதை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நேதாஜி சந்தோஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்

 குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad