தூத்துக்குடி மாவட்ட கல்லூரிகளுக்கான டாக்டர் சிவந்தி கோப்பை கால்பந்தாட்ட போட்டி நாசரேத் மர்காஷியஸ் கல்லூரியில் நடைபெற்றது. இப் போட்டியில் பல கல்லூரிகள் அணிகள் கலந்து கொண்டன.
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி அணி அபாரமாக விளையாடி வெற்றிக்கோப்பையை தன் வசப்படுத்தி முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்தது வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநர் ஜோஸ் சுந்தர், கல்லூரியின் தாளாளர் மாமல்லன் வெகுவாக பாராட்டினார்.
மேலும் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெயக்குமார், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக