சிதம்பரம் அருகே வேதனை உழவர் அட்டை இல்லை என மறுப்பு மகள் திருமண உதவித்தொகை கிடைக்காமல் 68 வயது விவசாயி தவிப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 6 அக்டோபர், 2026

சிதம்பரம் அருகே வேதனை உழவர் அட்டை இல்லை என மறுப்பு மகள் திருமண உதவித்தொகை கிடைக்காமல் 68 வயது விவசாயி தவிப்பு.


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தவர்த்தாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பழனிசாமி 68 இவர் தனது மகளின் திருமணத்திற்காக அரசு வழங்கும் உழவர் பாதுகாப்புத் திட்ட திருமண உதவித்தொகை கோரி அதிகாரிகளிடம் விண்ணப்பித்திருந்தார்
விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகியும் உதவித்தொகை கைக்கு வந்து சேரவில்லை இதனால் அதிர்ச்சியடைந்த பழனிசாமி, இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நேரில் சென்று விசாரித்துள்ளார். அப்போது, அரசுப் பதிவேடுகளில் அவரது "உழவர் அட்டை" விவரங்கள் இல்லை எனக் கூறி அதிகாரிகள் மனுவை நிராகரிக்கும் வகையில் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து வேதனையுடன் பேசிய விவசாயி பழனிசாமி எனக்கு 68 வயதாகிறது. நீரிழிவு, இதய நோய் மற்றும் சிறுநீரகப் பாதிப்பால் கடுமையாக அவதிப்பட்டு வருகிறேன். அரசு அதிகாரிகளின் அலட்சியத்தாலோ அல்லது பதிவேட்டில் ஏற்பட்ட தவறாலோ என் பெயர் விடுபட்டுள்ளது. அரசு செய்த தவறுக்கு நான் ஏன் பலியாக வேண்டும் எனக் கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ளார்
அரசு அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு பதிவேடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தனது மகளின் திருமண உதவித்தொகையை விரைந்து வழங்கிட வேண்டும் என்றும் அவர் சிதம்பரம் சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
நோயினாலும் பொருளாதார நெருக்கடியினாலும் தவிக்கும் முதியோர் விவசாயியின் கோரிக்கையை ஏற்று, கடலூர் மாவட்ட நிர்வாகமும் சிதம்பரம் சார் ஆட்சியரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்க படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad