திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண்களுக்கு ஏற்படும் கருப்பைவாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் மற்றும் வாய் புற்றுநோய் ஆகியவற்றைத் தடுப்பதற்கும், நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சிறப்பு மருத்துவப் பரிசோதனை வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க், அவர்கள் மருத்துவப் பரிசோதனை வாகனத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்த மருத்துவப் பரிசோதனை வாகனத்தின் மூலம் புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக, பெண்களுக்கு ஏற்படும் கருப்பைவாய் மற்றும் மார்பகப் புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிவதுடன், வாய் புற்றுநோயையும் கண்டறிந்து உரிய மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது நோயின் தீவிரத்தைக் குறைப்பதற்கும், உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவதற்கும் உதவியாக இருக்கும். எனவே, பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், மருத்துவப் பரிசோதனைகளின் அவசியத்தை உணர்ந்து, மருத்துவர்களின் ஆலோசனையின்படி பரிசோதனைகளை மேற்கொண்டு தங்கள் உடல்நலத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆரம்பகால கண்டறிதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த மருத்துவப் பரிசோதனை வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கோ.பாபு
திருவண்ணாமலை
மாவட்ட செய்தியாளர்
9843780102
வி.ஜெகன்
திருவண்ணாமலை மாவட்டம் ஒளிப்பதிவாளர்
9894381487
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக