குடியாத்தம் அருகே புளியமரத்தில் மினி வேன் மோதி விபத்து இருவர் படுகாயம், மூவர் லேசான காயம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 9 அக்டோபர், 2026

குடியாத்தம் அருகே புளியமரத்தில் மினி வேன் மோதி விபத்து இருவர் படுகாயம், மூவர் லேசான காயம் !

குடியாத்தம் அருகே புளியமரத்தில் மினி வேன் மோதி விபத்து  இருவர் படுகாயம், மூவர் லேசான காயம் !
குடியாத்தம், அக்டோபர் 9 -
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் செலுத்துவதற்காக மாதனூரில் இருந்து குடியாத்தம் நோக்கி மினி வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது உள்ளி கூட்ரோடு அருகே வந்தபோது, ஓட்டு நரின் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலையோரம் இருந்த புளியமரத் தில் மோதியது. இந்த விபத்தில் மினி வேனில் பயணம் செய்த இருவர் பலத்த காயமடைந்தனர். மேலும், மூவர் லேசான காயமடைந்தனர். தகவலறிந்த குடியாத் தம் தாலுகா காவல் நிலைய தலைமை காவலர் முருகன் மற்றும் போலீசார் சம் பவ இடத்திற்கு விரைந்து சென்று, காய மடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு குடியாத்தம் தலைமை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவிராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad