youtube ஐ பார்த்துஏடிஎம் ல் திருட முயன்ற இரண்டு சிறார்கள் உட்பட மூன்று பேர் கைது ! போலீசார் விசாரணை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 நவம்பர், 2026

youtube ஐ பார்த்துஏடிஎம் ல் திருட முயன்ற இரண்டு சிறார்கள் உட்பட மூன்று பேர் கைது ! போலீசார் விசாரணை !

youtube ஐ பார்த்துஏடிஎம் ல் திருட முயன்ற இரண்டு சிறார்கள் உட்பட மூன்று பேர் கைது ! போலீசார் விசாரணை !
குடியாத்தம், நவம்பர்  14 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் கடந்த அக் 31 ஆம் தேதி விடியற்காலை ஏ டி எம் ஐ உடைத்து திருட முயன்ற இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் கைது.வேலூர் மாவட்டம் குடியாத்தம், அம்பேத்கர் சிலை அருகே உள்ள அரசு வங்கி கிளையில் ஏடிஎம் மையம் உள்ளது.இதனிடையே அக 31 ஆம் தேதி நள்ளிரவில் இருசக்கர வாக னத்தில் வந்த மூன்று நபர்கள் முகமூடி அணிந்து ஏடிஎம் மையத்துக்குள் நுழை ந்து ஏடிஎம் மையத்தில் உள்ள கேமராவி ற்கு ஸ்பிரே அடித்து விட்டு, தாங்கள் எடுத்து வந்த ஹாக்ஷா பிளேடு உள்ளிட்ட ஆயுதங்களால் ஏ டி எம் மை உடைத்து திறக்க முயற்சி செய்துள்ளனர்.அப்போது அந்த பகுதியில் காவலர்கள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவதை அறிந்த மூன்று பேரும் அங்கிருந்து ஒப்பி விட்ட நிலையில், வங்கி கிளை மேலாளர் இது குறித்து குடியாத்தம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் அதனைத் தொடர்ந்து ஏடிஎம் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் அதனை தொடர்ந்து பல பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக் களை ஆராய்ந்து குடியாத்தம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஏ டி எம் கொள்ளை முயற்சி சம்பவத்தில் ஈடுபட் டது பெரும்பாடி பகுதியைச் சேர்ந்த பிரசாந்த்(வயது 20) மற்றும் அதே பகுதி யை சேர்ந்த (17 வயது )சிறுவன், லிங்குன் றம் பகுதியைச் சேர்ந்த மற்றொரு சிறு வன் என தெரிய வந்தது.இதனையடுத்து பிரசாந்த் உள்ளிட்ட இரண்டு சிறார்களை யும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணை யில்,யூ டி யூ பில் பார்த்து பணத்தை திருட முயற்சி செய்ததாகவும், ரோந்து பணியில் இருந்த போலீசார் அவ்வழியே வருவதை பார்த்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக வும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 
இதனை தொடர்ந்து பிரசாந்த் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்த குடியாத்தம் நகர போலீசார் மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad