வடலூரில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வரும் தனியார் பேருந்துகள் நடவடிக்கை எடுக்குமா வடலூர் போக்குவரத்து காவல்துறை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 அக்டோபர், 2026

வடலூரில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வரும் தனியார் பேருந்துகள் நடவடிக்கை எடுக்குமா வடலூர் போக்குவரத்து காவல்துறை.


கடலூர் மாவட்டம் வடலூர் பேருந்து நிலைய பகுதியில் தனியார் பேருந்துகள் அடிக்கடி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது 
வடலூர் நான்கு முனை சந்திப்பு பகுதியில் இருந்து சென்னை கும்பகோணம் மார்க்கமாகவும் கடலூர் விருத்தாச்சலம் மார்க்கமாகவும் பல கனரக வாகனங்கள் இலகுரக சரக்கு வாகனங்கள் பேருந்துகள் இருசக்கர வாகனங்கள் தினமும் சென்று வருகிறது 
இந்நிலையில் வடலூர் நான்கு முனை சந்திப்பு பகுதி எந்நேரமும் போக்குவரத்து நெரிசலாக காணப்பட்டு வருகிறது இந்நிலையில் போக்குவரத்து போலீசார் தொடர்ந்து போக்குவரத்தை சரி செய்து வரும் நிலையில் 
தனியார் பேருந்துகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது 

சென்னை கும்பகோணம் சாலை பேருந்து நிறுத்தத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேர பிரச்சினை காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது தொடர்ந்து வடலூர் போக்குவரத்து போலீசார் பேருந்தை எடுக்கச் சொல்லி ஒலிபெருக்கியில் தெரிவித்தும் இதனை கண்டுகொள்ளாத பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர் 
போக்குவரத்து போலீசாரின் அறிவுறுத்தலை மீறி பேருந்தை எடுக்காமல் மற்ற வாகனங்களுக்கும் வழிவிடாமல் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேருந்தை நிறுத்தி வாக்குவாதம் செய்து வருவது தொடர்கதையாகி வருகின்றது 
இதுபோன்று தொடர்ந்து போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் தனியார் பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad