வடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 அக்டோபர், 2026

வடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை.


கடலூர் மாவட்டம் வடலூர் பண்ருட்டி சாலையில் உள்ள நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் 

சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வடலூர் பேருந்து நிலையம் முதல் விருதாச்சலம் சாலையில் சபை பேருந்து நிலையம் வரையிலும் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது
சாலைகளில் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் தொடர் விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்து வருகின்றனர் 
கடந்த காலங்களில் போக்குவரத்து அதிகம் மிகுந்த சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பாள் ஒரே மாதத்தில் சுமார் 20 முதல் 30 வாகன விபத்துகள் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்பட்டதால் அப்பொழுது நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் தற்காலிகமாக அகற்றப்பட்டதாகவும் பின்னர் அதனை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வடலூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பல புகார் அளித்தும் இன்று வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் மேலும் ஆக்கிரமிப்புகள் அதிகமாகி வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர் தொடர்ந்து நெடுஞ்சாலையில் மண்ணைக் கொட்டி ஆக்கிரமிப்பு செய்வதால் மழைக்காலங்களில் மழை நீர் வடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது எனவும் தொடர்ந்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது 
ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது தமிழக முதல்வர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad