பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் திறந்த நிலையில் உள்ள பள்ளம் நடவடிக்கை தேவை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 அக்டோபர், 2026

பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் திறந்த நிலையில் உள்ள பள்ளம் நடவடிக்கை தேவை.


திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம் தச்சம்பாடி ஊராட்சி அரிச்சந்திர நகர் பகுதியில் தொட்டி அமைப்பதற்காகத் தோண்டப்பட்ட பள்ளம் இதுவரை உரிய முறையில் மூடப்படாமல், தண்ணீர் தேங்கிய நிலையில் ஆபத்தானதாக உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, மழைக்காலங்களில் பள்ளத்தில் தண்ணீர் தேங்குவதால், அதன் ஆழம் தெரியாமல் யாரேனும் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, பொதுமக்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட ஆணையர் அவர்கள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மேலும், தொட்டி அமைக்கும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியாத சூழலில், பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள பள்ளத்தை உடனடியாக மண் கொண்டு மூடி, அந்தப் பகுதியைப் பாதுகாப்பான நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

எனவே உயிர் சேதம் ஏற்படும் முன்பே நடவடிக்கை எடுக்க வேண்டும்! ஆபத்தான பள்ளத்தை உடனடியாக மூட சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

கோ.பாபு
திருவண்ணாமலை
மாவட்ட செய்தியாளர்
9843780102

வி.ஜெகன் 
திருவண்ணாமலை மாவட்டம் ஒளிப்பதிவாளர் 
9894381487

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad