மேற்கு வங்கத்திலிருந்து கள்ள நோட்டு எடுத்து வந்து புழக்கத்தில் விட்ட ஐந்து பேர் கைது ரூபாய் 1.50 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்
வேலூர் மாவட்டம், குடியாத்தம், தரணம் பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹோட்டல் தொழில் நடத்தி வரும் ரபிக் என்பவர் ப்ளிப்கார்ட்டில் பொருள் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அப்போது flipkart பொரு ளை டெலிவரி செய்யும் போது டெலிவரி செய்தவரிடம் ரபிக் 500 ரூபாய் நோட்டு இரண்டை கொடுத்துள்ளார். அந்த 500 ரூபாய் நோட்டின் மீது சந்தேகம் ஏற்பட்ட பிளிப்கார்ட் டெலிவரி பாய் குடியாத்தம் காவல் துறையினருக்கு தகவல் தெரி வித்துள்ளார். அதன் பெயரில் ரபிக் என்ப வரை கைது செய்து அவரிடமிருந்த ரூ . 50,000 கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில் தங்கம் நகர் பகுதியில் சேர்ந்த ஜூபேர் என்பவரிடம் கள்ள நோட்டு வாங்கியதாக தகவல் தெரிவித்துள்ளார்.அதன் பேரில் ஜுபேர் என்பவரை கைது செய்து அவரி டம் இருந்த ரூபாய் 20,000 கள்ள நோட்டு களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில், மேல்பட்டி அடுத்த சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவரும் பேரணாம்பட்டு அடுத்த டிடி மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த காமராஜர் என்பவரும் கள்ள நோட்டு கொடுத்ததாக ஜுபேர் கொடுத்த தகவலின் பெயரில் இருவரையும் கைது செய்து அவர்களிட மிருந்த 50 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு கள் பறிமுதல் செய்தனர். கோபால் மற் றும் காமராஜ் இருவரிடம் விசாரணை மேற்கொண்டதில் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த பாபு என்பவர்தான் கள்ள நோட்டு கள் கொடுத்ததாக தகவல் தெரிவித்ததை தொடர்ந்து பாபு என்பவரை கைது செய்து அவரிடமிருந்த முப்பதாயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்து பாபு என்பவரை தீவிர விசாரணை மேற் கொண்டதில் அவர் மேற்கு வங்கத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் கள்ள நோட்டு வழக்குகளில் கைதாகி சிறைக்கு சென்று வந்ததும் மேற்கு வங்கத்தில் இந்த வழ க்கு சம்பந்தமாக சென்று வரும்போது பல கள்ள நோட்டு கும்பலிடம் தொடர்பு ஏற் பட்டு அதன் மூலம் கள்ள நோட்டுகளை வாங்கி வந்து குடியாத்தம் பேரணாம்பட்டு ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் புழக்கத் தில் விட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. அதன் பெயரில் குடியாத்தம் போலீசார் மேற்கு வங்கத்தில் பாபுவிற்கு யார் கள்ள நோட்டு விநியோகம் செய்தது என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குடியாத்தம் போலீசார் ரபீக் ஜுபேர்,கோபால்,காமராஜ்,பாபு ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து அவர் களிடம் இருந்த ரூபாய் 1.50 லட்சம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து பாபுவை விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். Flipkart டெலிவரி பாய் கொடுத்த தகவலின் பெயரில் கள்ள நோட்டு புழக்கத்தில் விட்ட ஐந்து பேரை கைது செய்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக