குடியாத்தத்தில் ரூ.18 கோடிக்கு மேல் பணம் வசூலித்து மோசடி செய்ததாக. புகார் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 30 அக்டோபர், 2026

குடியாத்தத்தில் ரூ.18 கோடிக்கு மேல் பணம் வசூலித்து மோசடி செய்ததாக. புகார் !

குடியாத்தத்தில் ரூ.18 கோடிக்கு மேல் பணம் வசூலித்து மோசடி செய்ததாக. புகார் !
குடியாத்தம் , அக்டோபர் 30 -
      வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த 
 அம்மனாகுப்பம் பகுதியில். சுமார் 800- க்கும் மேற்பட்டோர் பாதிப்பு எனக் கூறி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு வேலூர் மாவட்டம், குடி யாத்தம் அடுத்த அம்மணாங்குப்பம் பகுதி யைச் சேர்ந்த பூபாலன், 100-க்கும் மேற் பட்ட பெண்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனு வில், ஆதி பகவான் நிறுவனம் சார்பில் 2024–2025ஆம் ஆண்டுகளில் தீபாவளி சிறுசேமிப்புத் திட்டம், பொங்கல் அரிசி திட்டம், குலுக்கல் திட்டம், ஏலச்சீட்டு மற் றும் டெபாசிட் உள்ளிட்ட பல்வேறு திட்டங் கள் மூலம் சுமார் 800 பேரிடம் ரூ.18 கோடி க்கு மேல் வசூல் செய்ததாகக் குறிப்பிட்டு ள்ளார். மேலும், மாதந்தோறும் சிறு தொ கைகளாகப் பணம் செலுத்தி வந்த நிலை யில், நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி நிறுவ னத்தைச் சேர்ந்தவர்கள் தலைமறைவா கிவிட்டதாகவும், தீபாவளிக்காக வழங்க வேண்டிய பட்டாசுகள், வீட்டு உபயோகப் பொருட்கள், அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் இதுவரை வழங்கப்படவில் லை என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்.
தம்மை நம்பிப் பணம் செலுத்தியவர்கள், நிறுவனம் பணத்தைத் திருப்பித் தராவிட் டால் தம்மிடம் பணத்தைக் கேட்டு நெருக் கடி கொடுப்பதாகவும் வேதனை தெரிவித் துள்ளார். இதுதொடர்பாக ஏற்கெனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்திலும், குடியாத்தம் நகர காவல் நிலையத்திலும் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார். மேலும், சீட்டு நடத்தும் ஏஜென்ட் ஒருவரைப் பிடித்து காவல் துறை யினரிடம் ஒப்படைத்ததாகவும், இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில் லை என்றும் தெரிவித்துள்ளார்.எனவே, இந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள செல்வகுமார், செந்தில்குமார், வல்லவன், சீனிவாசன், பழனி, பரந்தாமன், சூர்யா, ஜெயக்குமார், மற்றொரு சீனிவாசன் மற்றும் சரிதா உள்ளிட்டோர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பணம் செலு த்தி பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்க மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறு த்தப்பட்டுள்ளது.

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad