மேல்விஷாரத்தில் அரசு கால் வாய் ஆக்கி ரமிப்பு அகற்றுவதில் குளறுபட நீதி மன்ற உத்தரவின்படி முழுமையாக அகற்ற வில் லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 30 அக்டோபர், 2026

மேல்விஷாரத்தில் அரசு கால் வாய் ஆக்கி ரமிப்பு அகற்றுவதில் குளறுபட நீதி மன்ற உத்தரவின்படி முழுமையாக அகற்ற வில் லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு !

மேல்விஷாரத்தில் அரசு கால் வாய் ஆக்கி ரமிப்பு அகற்றுவதில் குளறுபட நீதி மன்ற உத்தரவின்படி முழுமையாக அகற்ற வில் லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு !
ராணிப்பேட்டை , அக்டோபர் 30 -
ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் நகராட்சிக்கு உட்பட்ட மீராசாகிப்தெருவில் உள்ள அரசு புறம்போக்கு கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள் ளனர். மீராசாகிப் தெருவில் சர்வே எண் 221-ல் அமைந்துள்ள அரசு புறம்போக்கு கால்வாயில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள் ளதாகக் கூறி, அதனை அகற்றக் கோரி பொதுமக்கள் நீதிமன்றத்தை நாடினர். இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், W.P. எண் 29761/2025-ல் கடந்த 08.08.2025 அன்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவின்படி, சம்பந்தப்பட்ட அரசு புறம் போக்கு கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பு களை எட்டு வாரங்களுக்குள் அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட நில அளவீட்டில், கால்வாயை ஆக்கிரமித்து சுமார் 18 சதுர மீட்டர் பரப்பளவில் வீடு கட்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றாமல், மிகக் குறைந்த அளவிலான பகுதிகளை மட்டுமே அகற்றிவிட்டு பணி கள் நிறுத்தப்பட்டதாக அப்பகுதி பொது மக்கள் தற்போது குற்றச்சாட்டை எழுப்பி யுள்ளனர்.மேலும், அரசு கால்வாயின் முழுப் பகுதியும் மீட்கப்படாத நிலையில், நீதிமன்ற உத்தரவு முழுமையாகச் செயல் படுத்தப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்து ள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத் திடம் பலமுறை மனுக்கள் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்
எனவே, சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் மீண்டும் நேரில் ஆய்வு செய்து, சர்வே எண் 221-ல் உள்ள அரசு புறம்போக்கு கால்வாயின் முழு அளவையும் உறுதி செய்ய வேண் டும் என்றும், நீதிமன்ற உத்தரவின்படி எஞ்சியுள்ள ஆக்கிரமிப்புகளையும் முழு மையாக அகற்றி கால்வாயை மீட்டெடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலி யுறுத்தியுள்ளனர். நீதிமன்ற உத்தரவின் படி ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற் கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் நிலை யில், முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற் றப்படாதது தொடர்பான பொதுமக்களின் குற்றச்சாட்டுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரி கள் விளக்கம் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

 மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார்
9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad