பணி தள பொறுப்பாளரை மாற்றக்கோரி குடியாத்தம் பிடிஓ அலுவலகம் முற்றுகை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 31 அக்டோபர், 2026

பணி தள பொறுப்பாளரை மாற்றக்கோரி குடியாத்தம் பிடிஓ அலுவலகம் முற்றுகை !

பணி தள பொறுப்பாளரை மாற்றக்கோரி குடியாத்தம் பிடிஓ அலுவலகம் முற்றுகை!
குடியாத்தம் , அக்டோபர் 31-
       வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாழை யாத் தம் ஊராட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம் – விசார ணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்ப தாக அதிகாரி உறுதி வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தா ழையாத்தம் ஊராட்சியில், 150 நாள் வே லைத் திட்டத்தின் கீழ் புதிதாக நியமிக் கப்பட்டுள்ள பணி தள பொறுப்பாளரை மாற்றக்கோரி, 50-க்கும் மேற்பட்ட பெண் கள் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர்.தாழையாத்தம் ஊராட்சி யில் VB-G RAM G எனப்படும் 150 நாள் வே லைத் திட்டத்தின் கீழ் தற்போது புதிதாக ராதா என்பவர் பணி தள பொறுப்பாள ராக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படு கிறது. இவரது நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி யைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண் கள் ஒன்றுதிரண்டு குடியாத்தம் பிடிஓ அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண் கள், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பணி தள பொறுப்பாளரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி தங்களது கோரிக்கை களை முன்வைத்தனர். இதனால் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் பரபர ப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) கனகராஜ், முற்று கைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது கோரிக்கைகள் மற்றும் புகார்களைக் கேட்டறிந்தார். மேலும், பெண்கள் தெரி வித்துள்ள புகார்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என அவர் உறுதியளித்தார்.
அதிகாரியின் உறுதியை ஏற்றுக்கொண்ட பெண்கள், தங்களது முற்றுகைப் போராட் டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பணி தள பொறுப்பாளர் நிய மனம் தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பிடிஓ அலுவலகத்தை முற்று கையிட்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad