கடலூரில் பி.ஆர்.அம்பேத்கர் சேவா ரத்னா தேசிய விருதுகள் வழங்கும் விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 25 அக்டோபர், 2026

கடலூரில் பி.ஆர்.அம்பேத்கர் சேவா ரத்னா தேசிய விருதுகள் வழங்கும் விழா.


அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி ARPI தேசிய தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு NDF சார்பில் தமிழகத்தில் சிறந்த சமூக சேவை புரிந்தவர்களுக்கு பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சேவா ரத்னா தேசிய விருதுகள் வழங்கும் விழா கடலூர் காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியை விடியல் சமூக சேவை இயக்குநர் புஷ்ப.சௌரிராஜன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாநில வழக்கறிஞர் அணி தலைவர் டி.கோவிந்தன் தலைமை தாங்கினார். மாநில தலைமை நிலைய செயலாளர் அ.த.ஸ்ரீ.ராகுல் கடலூர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆறுமுகம் ஆகியோர்கள் வரவேற்புரையாற்றினார்கள்.

புதுவை மாநில தலைவர் கே.என். கலியமூர்த்தி, கடலூர் மாவட்ட அமைப்பாளர் ஜெ.ஆர்.ஜெயச்சந்திரன், ஏ.ஆர்.எல்.எப் மாநில செயல் தலைவர் எஸ்.தமிழ் இலக்கியா, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் கே. பரமேஸ்வரன், கே.இராஜா, விழுப்புரம் மாவட்ட செயலாளர் பொறியாளர் சி.சிவபதி, ஐ.அருள், மாவட்ட தொ.அ.தலைவர் ஏ.சந்திரமோகன், மாவட்ட துணை தலைவர் ஏ.தயாள பாளட மூர்த்தி, மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் பொன்.சிகாமணி, மாவட்ட

தொழிலாளர் அணி செயலாளர் எம்.மாரிமுத்து, கடலூர் ஒன்றிய தலைவர் பழ.ஜெயபால், மாவட்ட நுகர்வோர் பேரவை மக்கள்.குமார், வி.யோகேஸ்வரன் ஆகியோர்கள் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.

தமிழகத்தில் சிறந்த சமூக சேவை புரிந்தவர்களுக்கு அம்பேட்கர் இந்திய குடியரசு கட்சி ARPI தமிழ் மாநில தலைவரும் தேசிய தலித் கூட்டமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளருமான அ.த.ஸ்ரீரங்கன் பிரகாஷ் டாக்டர் பி.ஆர்.அம்பேட்கர் சேவா ரத்னா தேசிய விருதுகள் வழங்கினார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தமிழ் மாநில செயலாளர் மூத்த வழக்கறிஞர் ஏ.எஸ்.சந்திரசேகரன் விருதாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சி மாநில பொறுப்பாளர் எஸ்.தனசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் கடலூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மு.அறிவுடைநம்பி, சேலம் அம்பேட்கர் மக்கள் கட்சி மாநில தலைவர் சி.அம்பேத்கர், அரசு ஊழியர்கள் ஐக்கிய பேரவை பொதுச் செயலாளர் பா.பாவானன், ஏ.ஆர்.பி.ஐ கட்சி மாநில அமைப்பு செயலாளர் சேலம் சி.விஸ்வநாதன், இந்திய குடியரசு கட்சி மாநில செயலாளர் நீலப்புலி க.சத்தியா, சட்ட புலிகள் கட்சி மாநில தலைவர் சே.சத்தியராஜ், பொது செயலாளர் கி.வீரமணி, பாஜக மாநில பொதுக் குழு உறுப்பினர் இரா.குனா (எ) குனசேகரன், இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் பால.வீரவேல், மதிமுக நெல்லிக்குப்பம் நகர் மன்ற உறுப்பினர் குண.சங்கர், வடலூர் அஇஅதிமுக நகர கழக செயலாளர் பொறியாளர் என்.ஜெயபிரகாஷ், தியாகி பாலா பேரவை ஒருங்கிணைப்பாளர் சா.அருள்வேந்தன், பொதுச் செயலாளர் வழக்கறிஞர் தா.காரல் மார்க்ஸ், விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் தங்க.முருகன், நீலவானம் நுகர்வோர் பேரவை மாவட்ட தலைவர் எம். மணிபாலன், கடலூர் மாவட்ட மாற்று திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் சிவ. இரவிச்சந்திரன், நெல்லிக்குப்பம் காங்கிரஸ் தலைவர் செல்வ.பார்த்தீபன், மின்சார வாரிய பொறியாளர் பேரவை பொதுச் செயலாளர் மு.பெரியாண்டவர், எஸ்சி எஸ்டி நலச் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.ஞானசேகரன், மாவட்ட பத்திரிக்கையாளர் பொறியாளர் எம்.ஆனந்தராஜ், தமிழ் நாடு அருந்த்தியர் சங்க தலைவர் சி.ஏ.வரதராஜன், விசிக அண்ணா கிராமம் ஒன்றிய செயலாளர் சி.கண்ணன், பொது மறை திருக்குறள் பேரவை பொதுச் செயலாளர் ஆசிரியர் எஸ்.அருள் ஜோதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி சமூக அமைப்பினர் விருதாளர்களை வாழ்த்தி பேசினார்கள். ஏ.ஆர்.பி.ஐ கட்சி கடலூர் மாநகர தலைவர் கே.புஷ்பநாதன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad