நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நவம்பர் 1 ஆம் தேதியன்று பகல் 3 மணிக்கு ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (RSS) சங்கம் சார்பில் 100 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூரு இன்றி சிறப்பான சீறுடை அணிந்து கட்டுக்கோப்பாக பிரம்மாண்டமான அணிவகுப்பு நடைபெற்றது.
கோத்தகிரி டானிங்டனிலிருந்து ஆரம்பித்த அணிவகுப்பு காமராஜர் சதுக்கம் மார்க்கெட் பேருந்து நிலையம் ராம்சந்த் ஆகிய நகர சாலைகளில் நடந்து செல்மா அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்துடன் நிறைவடைந்தது. கோத்தகிரி காவல் துறையினர், போக்குவரத்து காவல்துறையினர்மற்றும் ஊர்காவல்படையினர் இணைந்து சிறப்பாக ஏற்பாடுகள் செய்து பாதுகாப்பளித்தனர். பொதுமக்களும் வணிகர்களும் கட்டுக்கோப்பான ஆர் எஸ் எஸ் அணிவகுப்பை கண்டு வியந்து பாராட்டினார்கள்.
ராஸ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் (RSS) 1925 ஆம் ஆண்டு விஜயதசமி நாளில் டாக்டர்.கேசவ் பாலிராவ் ஹெட்கவரால் நாக்பூரில் தொடங்கப்பட்டது. 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதியுடன் இந்த அமைப்பு தனது 100 ஆம் ஆண்டை நிறைவு செய்தது.
கலாச்சாரப் பிணைப்பு ஒழுக்கம் மற்றும் தேசப்பற்றுள்ள குடிமக்களை உருவாக்குதல் என்பதே RSS அமைப்பின் நோக்கம் ஆகும்.
சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு தற்போது உலகின் மிகப் பெரிய அரசு சாரா அமைப்புகளில் (NGO) ஒன்றாக கருதப்படுகிறது.
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 முதல் 28 ஆம் தேதி வரை டெல்லியில் மிகச்சிறப்பாக கொண்டாடியது.
நூற்றாண்டு விழாவில் பாரத பிரதமர் நரேத்திர மோடி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் ரூபாய் 100 சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலை வெளியிடப்பட்டது.
RSS தொண்டர்கள் இயற்கை இடர்பாடுகள் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபடுவதை இந்தியா மற்றுமன்றி உலக நாடுகள் பாராட்டுகிறது.
தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக