உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 1 நவம்பர், 2026

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நட்டாத்தி ஊராட்சியில் இன்று (01.11.2026), உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

இக்கிராம சபை கூட்டத்தில் கூட்டப் பொருள்களாக, கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும் (01.04.2026 முதல் 31.10.2026 வரை), கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்தும், ஊரப்பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், 

கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், தமிழ்நாடு கிராம மேம்பாடு மாற்றம் மற்றும் மறுமலர்ச்சி முன்னெடுப்பு, குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் முறையைத் தடுத்தல், தமிழ்நாடு பல்லுயிர் வாரியம் -பல்லுயிர் மேலாண்மைக்குழு குறித்தும், 

இழிவு தரும் சாதிப்பெயர்களை மாற்றம் செய்தல், வளர்ப்பு பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல், தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்துதல், சபாசார் வலைத்தளம் உள்ளாட்சிகள் தின கிராம சபைக்கூட்டம் குறிப்பு(2026), தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் கிராம சபா கூட்டப்பொருள் மற்றும் இதர கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்:
உள்ளாட்சி தினம் என்பது ஜனநாயகத்தின் முக்கியமான தினமாகும். ஏனென்றால் கடைக்கோடி மக்களும் தங்களுடைய கிராமத்தில் தேவைகளை நிவர்த்தி செய்யும் கூட்டம்  கிராம சபை கூட்டமாகும். 

ஆகவே பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற கிராம சபைகளில் கண்டிப்பாக பங்கேற்று தங்களின் கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் அவ்வாறு விவாதிக்கும் பொழுது உங்கள் கிராமத்திற்கான அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்ய முடியும். 

இதர பொதுவான கோரிக்கைகளை அரசு விதிமுறைகளுக்கு ஏற்ப தகுதியான மனுக்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  

பொது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து அமைக்கப்பட்டுள்ள அரங்கினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார். 

பின்னர் சிறப்பாக பணியாற்றிய தூய்மை காவலர்களை கௌரவப்படுத்தியும்  2026-27 நிதியாண்டில் முழுமையாக வரி செலுத்தியமைக்காக  மாவட்ட ஆட்சியர் அவர்கள் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்வில் செயற் பொறியாளர் ஊரக வளர்ச்சி முகமை இளஞ்சேரன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கௌதம், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) பிர்தௌஸ் பாத்திமா, துணை இயக்குநர் வேளான் பூவரகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சின்னத்துரை, சரஸ்வதி, ஊராட்சி செயலாளர் முத்துராஜ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad