தமிழக அரசு பொது நூலக துறை சார்பாக கோத்தகிரி கிளை நூலகத்தில் நூலக வார விழா துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட தலைவர் அரிமா கோபால் அவர்கள் தலைமை தாங்கினார். அவர் தமது தலைமை உரையின் போது மாணவர்கள் சிறந்த குடிமக்களாக வளர வேண்டும் . போட்டிகள் நிறைந்த 21 ஆம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைக்கும் வகையில் மாணவர்கள் தங்கள் அறிவுத்ததிறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பன போன்ற பல செய்திகளை கூறினார். கிளை நூலகத்தின் நூலகர் திருமதி. அமுதா அவர்கள் முன்னிலை வகித்தார். அவர் தமது வாழ்த்துரையின்போது கோத்தகிரி நூலகம் கடந்த ஆண்டு மாநிலத்தில் சிறந்த வாசகர் வட்டத்திற்கான விருது பெற்றுள்ளது. மேலும் தற்போது இந்த நூலகம் 578 புரவலர்களுடன் தமிழகத்தின் சிறந்த நூலகமாக விளங்குகிறது எனக் கூறினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே. ஜே . ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராக கொண்டு வாழ்த்துரை வழங்கினார். அவர் தமது வாழ்த்துரையின் போது சமுதாய மாற்றத்திற்கான விதைகள் நூலகத்தில் தான் விதைக்கப்படுகிறது எனக் கூறினார். வழக்கறிஞர் முருகன், கோத்தகிரி இன்னர் வீல் சங்கத்தின் தலைவர் திருமதி. அனிதா மகேஷ், அரிமா மோகன்ராஜ், திருமதி. அனுஷா ஜெயராமன் மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முன்னதாக வாசகர் வட்ட செயலர் தமிழக அரசின் 'தமிழ்செம்மல்' விருது பெற்ற முனைவர் லிங்கன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். வாசகர் வட்ட நிர்வாகி ஆசிரியர் ராஜ்குமார் அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார். நூலக வார விழாவினை முன்னிட்டு மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு, கலை இலக்கியம்' ஓவியம், வினாடி வினா , திருக்குறள் ஒப்புவித்தல் , சதுரங்கம் போன்ற பல போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரளான மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். நூலக அலுவலக உதவியாளர் கண்ணப்பன் அவர்கள் நன்றி கூறினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக