அண்ணாமலையார் திருக்கோயிலின் ஆன்மீக வரலாற்றில் மற்றொரு சிறப்பான நிகழ்வாக, கோயிலுக்குப் புதிதாக வாங்கப்பட்ட 'நமச்சிவாயம்' என்ற யானைக்குட்டி, முதன்முறையாக திருவண்ணாமலை மாட வீதிகளில் கம்பீரமாகவும் பக்தி பரவசத்துடனும் வலம் வந்தது.
ஆன்மீக ஸ்தலமான திருவண்ணாமலைக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் வருகை தந்துள்ள இந்த புதிய யானைக்குட்டி மாட வீதிகளில் உலா வருவதைக் கண்ட பொதுமக்களும், ஆன்மீக பக்தர்களும் மிகுந்த ஆர்வத்துடனும் ஆவலுடனும் நேரில் கண்டு ரசித்தனர். புதிதாக வருகை தந்துள்ள 'நமச்சிவாயம்' யானைக்குட்டி முதல்முறையாக மாட வீதிகளில் வலம் வந்த இந்த நிகழ்வு, அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும், ஆன்மீக எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்வின்போது திரளான பக்தர்கள் உடனிருந்து யானைக்குட்டியை அன்போடு கண்டு மகிழ்ந்தனர்.
கோ.பாபு
திருவண்ணாமலை
மாவட்ட செய்தியாளர்
9843780102
வி.ஜெகன்
திருவண்ணாமலை மாவட்டம் ஒளிப்பதிவாளர்
9894381487
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக