முத்தியால்பேட்டையில் ரூ.17.84 லட்சத்தில் சாலை வாய்க்கால் மேம்பாட்டு பணி - MLA வையாபுரி மணிகண்டன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் முதலமைச்சர் ரங்கசாமி வழிகாட்டுதலின்படி, பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளை சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி நகராட்சி சார்பில் முத்தியால்பேட்டை தொகுதி பஜனை மடம் வீதியில் மாரியம்மன் கோவில் தெரு முதல் சின்னையாபுரம் வரை உள்ள பிரதான சாலை வாய்க்கால்கள் *ரூ.17 லட்சத்து 84 ஆயிரத்து 124* செலவில் மேம்படுத்தப்பட உள்ளது.
இந்த பணிக்கான பூமி பூஜை விழா வையாபுரி மணிகண்டன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
விழாவில் புதுச்சேரி நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு, நிர்வாக பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் பழனிராஜா, இளநிலை பொறியாளர் சிவசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள், என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக