அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி, குடியேற்றம் கணிதவியல் தேசியக் கருத்தரங்கு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 9 அக்டோபர், 2026

அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி, குடியேற்றம் கணிதவியல் தேசியக் கருத்தரங்கு !

அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி, குடியேற்றம் கணிதவியல் தேசியக் கருத்தரங்கு !
குடியாத்தம். அக்டோபர் 9 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரி குடியேற்றம், கணிதத்துறை சார்பாக ஒரு நாள் தேசிய கருத்தரங்கு   09.10.2026 அன்று நடை பெற்ற கருத்தரங்கிற்கு கல்லூரி முதல் வர் முனைவர் பெ. சீனுவாசகுமரன் அவர்கள் தலைமை தாங்கினார்
கணிதத்துறை தலைவர் மற்றும்துணைத் முதல்வர் முனைவர் செ. கருணாநிதி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்
இத்தேசிய கருத்தரங்கிற்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யிலிருந்து  பேராசிரியர் முனைவர் பி. நரசிம்மன் அவர்கள் கலந்து கொண்டு கணித  மாதிரியாக்கமும் அதன் பயன் பாடுகளும் பற்றி மாணவர்களுக்கு சிறப் பாக எடுத்துரைத்தார். இதன் தொடர்ச்சி யாக சிறப்பு அழைப்பாளர் பஞ்சாப் ஜலந் தரில் உள்ள முனைவர் பி.ஆர் அம்பேத்கர் என்.ஐ.டி-யிலிருந்து பேராசிரியர்  முனை வர் ஆர். சிவராஜ் அவர்கள்கணிதத்திலும் அதன் பயன்பாடுகளிலும் சமீபத்திய போக்குகள் பற்றி மாணவர்களுக்கு சிறப் பாக இணைய வழி மூலம் விரிவாக எடுத் துரைத்தார். மேலும், இக்கருத்தரங்கில் இணைப் பேராசிரியர்கள் முனைவர் ஆ. ஸ்ரீதர், முனைவர் ந. கெஜலட்சுமி, முனை வர் எஸ். செந்தில்குமார், முனைவர் லோ. விக்ரமன், முனைவர் மு. மலர்விழி, முனைவர் பா. புவியரசு, முனைவர் மு. சத்தியமூர்த்தி, பேராசிரியர் எஸ். தமிழ்ச் செல்வி மற்றும் கௌரவ விரிவுரையாளர் கள் கலந்து கொண்டனர். சுமார் 300 மாணவ மாணவிகள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad