வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயும் ஜமபந்தி தொடக்கம் !
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டாட் சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1435 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2026ல் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்/ வருவாய் தீர்வாய அலுவலர் மாவட்ட ஆட்சியர் பி.எஸ்.லீலா அலக்ஸ், இ.ஆ.ப. இன்று (17.06.2026) மனு அளித்த இரண்டு மாற்றுத்திறனாளிகளின் மனுவினை உடனடியாக பரிசீலனை செய்து தலா ரூ.9,000/மதிப்பிலான இரு சக்கர நாற் காலிகளை வழங்கினார். இந்நிகழ்வின் போது அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பி னர் த. வேலழகன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மு.பாபு, ஒன்றியக்குழுத் தலைவர் பாஸ்கரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மாறன், துணை ஆட்சியர் (பயிற்சி) கணேஷ், மாற்றுதிறனாளிகள் நலத் துறை நல அலுவலர் பாபு, வட்டாட்சியர் சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரம் தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக