திருப்பத்தூரில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி நீதிமன்றத்தில் சரண்!
வாணியம்பாடி, ஜூன்.18-
திருப்பத்தூர் மாவட்டம் 2026 சட்டமன்ற தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது, தவறான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாக ஆட்சேபனை தெரிவிக்க வந்தவர்களை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கே.சி.வீரமணியின் ஆதரவாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும்கே.சி.வீரமணி உள்ளிட்ட 50 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியதை தொடர்ந்து, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பின ரான கே.சி.வீரமணி நேற்று நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் ஜாமீன் நடைமுறைகள் முடிந்து பிணையில் அனுப்பி வைக்கப்பட்டார்.
தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவன இணை ஆசிரியர் மு. பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக