குடியாத்தத்தில் இலவச கண் சிகிச்சை பரிசோதனை மற்றும் விழி லென்ஸ் பொருத்தும் முகாம் !
குடியாத்தம் , ஜூலை 14 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கிருபை யின் ஜெபவீடு மூங்கப்பட்டு மற்றும் சென் னை டாக்டர் அகர்வால் கண் ஆராய்ச்சி மையம் அறக்கட்டளை இணைந்து இலவச கண் சிகிச்சை பரிசோதனை மற்றும் விழிலென்ஸ் பொருத்தும் முகாம் நேற்று காலை மூங்கப்பட்டு ஊராட்சியில் நடைபெற்றது இந்த முகாமில் ஊர் நாட்டாமை ஏ.ஆனந்தன் தலைமை தாங்கினார் மற்றும் முகாமில் சிறப்பு அழைப்பாளராக அம்மா மக்கள் முன் னேற்ற கழகத்தின் வேலூர் புறநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான எம் கே பூபாலன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கே சாமிநாதன் அ.குமார் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை முகம் ஒருங்கிணைப்பாளர் சே.சதீஷ் குமார்ஆகியோர் இந்த முகாமில் கலந்து கொண்டனர் இந்த முகாமில் ஒற்ற தலைவலி தூரப்பார்வை தொடர்ச்சியான தலைவலி கிட்ட பார்வை கண்ணில் புனற நீக்குதல் கண்ணில் சதை வளர்ச்சி போன்றவை பரிசோதனை செய்யப் பட்டது இந்த முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இந்த முகாமினை முனிசாமி நோவா ஏற்பாடு செய்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக