உலக மக்கள் தொகை தினம் 2026 விழிப்புணர்வு ரதம், பேரணியினை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி, தூய மரியன்னை கல்லூரி வளாகத்தில்
இன்று (17.07.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, குடும்பநலச் செயலகம் சார்பில் உலக மக்கள் தொகை தினம் 2026 விழிப்புணர்வு ரதம், பேரணியினை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் துவக்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்ததாவது:-
உலக மக்கள் தொகை தினம் ஆண்டுதோறும் ஜீலை 11 அன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதன் நோக்கம் குடும்பக்கட்டுபாடு, பாலின சமத்துவம், தாய்மார் சுகாதாரம், நிலையான வளர்ச்சி, குழந்தை திருமணம், பெண் கல்வி போன்றவைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை, குடும்பநலச் செயலகம் சார்பில் விழிப்புணர்வு ரதம், பேரணி நடைபெற்றது.
தூய மரியன்னை கல்லூரி வளாகத்தில் துவங்கப்பட்ட இப்பேரணி இந்திரா காந்தி சிலை வரை சென்றடைந்தது.
மேலும் சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் போன்ற துறைகள் கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு உதவித்தொகை கிடைப்பதற்காக இத்துறையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
ஆகவே, பொதுமக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்துக்களை பின்பற்றி, ஒத்துழைப்பு தரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
முன்னதாக, உலக மக்கள் தொகை தினம் 2026 விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஏற்றுக்கொள்ள, அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் இணை இயக்குநர் (நலப்பணிகள்) (பொ) மற்றும் துணை இயக்குநர், மருத்துவம் ஊரகப்பணிகள் மற்றும் குடும்பநலம், மரு.பொன் ரவி, துணை இயக்குநர்கள் மரு.சுந்தரலிங்கம் (காசநோய்), மரு.யமுனா (தொழுநோய்), மருத்துவ கண்காணிப்பாளர் மரு.பத்மநாபன், ரோட்டரி சங்க தலைவர், உறுப்பினர்கள், மாவட்ட விரிவாக்க கல்வியாளர்கள், வட்டார சுகாதாரப் புள்ளியாளர்கள் மற்றும் குடும்பநலம் சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக