மனைவியுடன் ஏற்பட்ட தகராறில்மதுக்கடை ஊழியர் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 17 ஜூலை, 2026

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில்மதுக்கடை ஊழியர் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை.

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில்
மதுக்கடை ஊழியர் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை

நாகர்கோவில் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மதுக் கடை ஊழியர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம் பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தண்டவாளத்தில் வாலிபர் பிணம்:
நாகர்கோவில் அருகே உள்ள புத்தேரி ரெயில் தண்டவாளத் தில் நேற்று காலையில் வாலிபர் ஒருவர் படுகாயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனை கண்ட அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே இதுபற்றி நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக் தினேஷ் டர் விஜயகுமார் தலைமையிலான போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்து வக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிணமாக கிடந்தவர் யார்? என விசா ரணையை தொடங்கினர்.

ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

அதில், நாகர்கோவில் புத்தேரி கணேஷ் நகர் பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 30) என்பது தெரிய வந்தது. நாகர்கோவிலில் உள்ள ஒரு மதுக்கடையில் பார் ஊழியராக வேலை பார்த்த தினேசுக்கும், அவரது மனைவி சுப்புலட்சுமிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்றுமுன்தினம் இரவும் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த நிலைக்கு சென்ற தினேஷ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண் டது தெரியவந்தது.

மேலும் இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்த தினேசுக்கு 2% வயதில் பெண் குழந்தை, ஒரு வய தில் ஆண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad