காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் ஜமாபந்தியில் பொதுமக்கள் மனுக்கள் !
வேலூர், ஜூன் 17 -
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டத்தில் 1435-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாய ஜமாபந்தி நிகழ்ச்சிநடைபெற்றது நிகழ்ச்சிக்கு வருவாய் தீர்வாய அலுவல ரும் வருவாய் கோட்ட அலுவலருமான அ. செந்தில்குமார் தலைமை வகித்தார்.
இந்நிகழ்வில் காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரி, துயர் துடைப்பு வட்டாட்சியர் சந்தோஷ்குமார், துணை வட்டாட்சியர் சிவகுமார், வருவாய் ஆய்வாளர் தமிழ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஜமாபந்தியின்
போது பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்ட னர் . மேலும், வருவாய் நிர்வாகம் தொடர் பான பணிகள் மற்றும் மக்கள் குறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக