ஆம்பூர் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றிய 4 குழந்தைகள் உட்பட 9 பேர் மீட்பு !
திருப்பத்தூர் , ஜுன் 17 -
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பைரப்பள்ளி பகுதியில் சின்ன கண்ணன் என்பவர் நடத்தி வரும் செங்கல் சூளையில், 4 குழந் தைகள் உட்பட 9 பேர் கொத்தடிமை களாக பணியாற்றி வருவதாக திருப் பத்தூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவிற்கு தகவல் கிடைத் தது தகவலின் பேரில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஜெ.நாகலட்சுமி என்ற விஜயராணி உத்தரவின் பேரில், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) ஆ.தணிகஜலம் தலைமையில் ஆம்பூர் வட்டாட்சியர் ரேவதி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், அங்கு பணியாற்றியவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கொத்தடி மை முறையில் வேலை செய்து வந்தது தெரியவந்தது.இதையடுத்து, 4 குழந்தைகள் உட்பட 9 பேரை அதிகா ரிகள் மீட்டு, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், மீட்கப் பட்டவர்களுக்கு அரசு சார்பில் உரிய நிவாரணம் மற்றும் மறுவாழ்வு உதவி கள் வழங்க நடவடிக்கைஎடுக்கப்படும் என்றும், கொத்தடிமைகளாக பணி யமர்த்தியதாக கூறப்படும் செங்கல் சூளை உரிமையாளர் சின்ன கண்ணன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக