குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன்ராஜா, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகச் சங்க இணையதளம் சேவையினை மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் தலைமையில் துவக்கி வைத்தனர்.
இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், அரசு தொழில் நிறுவனங்கள் இணைந்து செயல்படுத்துவதற்கான புதிய முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட நிர்வாகச் சங்க இணையதளத்தின் சேவையினை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் நோக்கம் மாவட்ட வளர்ச்சிக்கான முன்னுரிமை திட்டங்களுக்கான தேவைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படவுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கும், சமூகப் பொறுப்புணர்வு நிதியின் மூலம் திட்டங்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்திற்கு தொழில் நிறுவனங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன்ராஜா, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் அவர்கள் ஆகியோர் மேற்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில் NDSO நிறுவனம், APRIL நிறுவனம், NLC Tamil Nadu Power Ltd நிறுவனம் ஆகிய நிறுவனங்களுடன் மாவட்ட நிர்வாகம் புரிந்துணர்வு பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (12.07.2026) NLC Tamil Nadu Power Ltd நிறுவனத்தின் சமூக நீதி பொறுப்பு நிதியிலிருந்து ரூ13.25 மதிப்பீட்டில் மேஜை மற்றும் நாற்காலிகள் தூத்துக்குடி சமூக நீதி பள்ளி மாணவர் விடுதிக்கு அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் சி.ப்ரியங்கா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், மாவட்ட தொழில் மைய இணை இயக்குநர் / பொது மேலாளர் சொர்ணலதா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக