மாற்றுத்திறனாளி மாற்றுத்திறனாளி களுக்கு நல திட்ட உதவிகள் 97 வது மாதங்களாக ஆட்சியர் கவனத்திற்கு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 12 ஜூலை, 2026

மாற்றுத்திறனாளி மாற்றுத்திறனாளி களுக்கு நல திட்ட உதவிகள் 97 வது மாதங்களாக ஆட்சியர் கவனத்திற்கு !





மாற்றுத்திறனாளி  மாற்றுத்திறனாளி களுக்கு நல திட்ட உதவிகள் 97 வது மாதங்களாக  ஆட்சியர் கவனத்திற்கு !
97-வது மாதமாக மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், சலவைத் தொழிலாளர் களுக்கு அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் வழங்கி வரும் சமூக ஆர் வலர் கே வி ராஜேந்திரன்

குடியாத்தம், ஜூலை 12:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மனித நேயம் என்பது வார்த்தைகளில் மட்டு மல்ல, செயலிலும் வெளிப்பட வேண்டும் என்பதை நிரூபிக்கும் வகையில், வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிவாரணப் பொருட் கள் வழங்கும் சேவை மீண்டும் ஒருமுறை மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
குடியாத்தம் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழ மை (12.07.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் சலவைத் தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு, சேமியா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்த மனிதநேயப் பணியை சமூக ஆர் வலர் கே.வி. ராஜேந்திரன் கொரோனா பெருந்தொற்று காலத்தில்தொடங்கினார் அன்றைய அவசரத் தேவையாக ஆரம்பிக் கப்பட்ட இந்த முயற்சி, இன்று சமூக நலனுக்கான நிலையான சேவையாக வளர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளு க்கும் மேலாக இடைவிடாமல் ஒவ்வொரு மாதமும் உதவி தேவைப்படும் மக்களை நேரடியாக அடையாளம் கண்டு, அவர் களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருவது இச் சேவையின் தனிச்சிறப்பாகும்.ஒவ்வொரு மாதமும் சுமார் 100 பேருக்கு அரிசி பருப்பு சேமியா, மஞ்சள்தூள், போர்வைகள், புடவைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, இம்மாதம் 97-வது மாத நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான நிவாரணப் பொருள் தொகுப்புகள் பல ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களிடம் சென்றடைந்து ள்ளன.நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் கே.வி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் கிஷோர் மற்றும் குமரன் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர்களாக குடியாத்தம் பிரமாஸ் சிபி எஸ் இ பள்ளியின் நிறுவனர் ஆர்.பி. செந்தில் மற்றும் சமூக ஆர்வலர் பாரத் நந்தகுமார் ஆகியோர் பங்கேற்று, சுமார் 80 பயனாளிகளுக்கு நிவாரணப் பொருட் களையும் இனிப்புகளையும் வழங்கினர்.
நிகழ்ச்சியில் பேசிய அவர்கள்,சமூகத்தில் உதவி தேவைப்படும் மக்களுக்கு தொடர் ந்து கரம் நீட்டுவது மிக உயர்ந்த மனித நேயச் சேவையாகும். எந்தவித எதிர்பார்ப் பும் இல்லாமல், பல ஆண்டுகளாக தொடர் ந்து இந்தப் பணியை மேற்கொண்டு வரும் கே.வி. ராஜேந்திரனின் சேவை பாராட்டுக்குரியது. இதுபோன்ற முயற்சி கள் சமூகத்தில் அன்பு, ஒற்றுமை மற்றும் பொறுப்புணர்வை வளர்க்கும்," என்று தெரிவித்தனர்.நிவாரணப் பொருட்க ளைப் பெற்ற மாற்றுத்திறனாளிகள், திரு நங்கைகள் மற்றும் சலவைத் தொழிலா ளர்கள், "தொடர்ந்து மாதந்தோறும் எங்களை நினைத்து உதவி செய்து வரும் இந்தச் சேவை எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவாக உள்ளது" என்று நெகிழ்ச்சி யுடன் தெரிவித்தனர். குடியாத்தத்தில் சமூகப் பொறுப்புணர்வுடன் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த மனிதநேயப் பணி, பலருக்கும் முன்மாதிரியாக அமை ந்துள்ளது. இத்தகைய சேவைகளில் மேலும் பலர் இணைந்து, சமூக நலப் பணிகளை விரிவுபடுத்த வேண்டும் என்ற கருத்தும் நிகழ்ச்சியில் வலியுறுத் தப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவில் கவிதா நன்றி கூறினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad