அனுமதியின்றி இயங்கிய டாஸ்மாக் பார் அதிரடி மூடல் அதிக விலைக்கு பொருட் கள் கூடுதலாக விற்பனை செய்ததால் பரபரப்பு !
குடியாத்தம், ஜூலை 11 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம்-வேலூர் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு டாஸ் மாக் கடை அருகே அனுமதியின்றி செயல் பட்டு வந்த பாரை குடியாத்தம் டவுன் போலீசார் இரவோடு இரவாக அதிரடியாக மூடி உரிமையாளருக்கு எச்சரிக்கைவிடுத் தனர்.அதிக விலைக்கு தண்ணீர் பாட்டில், இறைச்சி உள்ளிட்டவை விற்பனை செய் ததால் பொதுமக்களுக்கு தொடர் இடை யூறு ஏற்பட்டு வந்தது.குடியாத்தம்-வேலூர் பிரதான சாலையில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடை வளாகத்தில்முறை யான அனுமதி இல்லாமல் தனியார் பார் ஒன்று இயங்கி வந்ததாக குடியாத்தம் டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.இந்த பாரில் மதுபானம் அருந்த வருபவர்களிடம் தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் கிளாஸ் , இறைச்சி, சிற்றுண்டி பொருட்களை நிர்ணயிக்கப் பட்ட விலையை விட 10 ரூ கூடுதல் விலை க்கு விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.மேலும் இரவு நேரங்க ளில் கூச்சல், சத்தம், வாகன நெரிசல் காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளு க்கு பெரும் இடையூறு ஏற்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.குடியாத்தம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் முருகன் , தனிப்பிரிவு போலீஸ் சரவணன் நேற்று இரவு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு அனுமதியின்றி செயல்பட்டு வந்த பாரை உடனடியாக காலி செய்ய உத்தர விட்டனர்.பாரில் இருந்த நாற்காலிகள், மேசைகள் மற்றும் பிற பொருட்களை அப்புறப்படுத்த செய்த போலீசார், இதுபோன்று அனுமதியின்றி பார் நடத்தக்கூடாது என உரிமையாளரை கடுமையாக எச்சரித்தனர்.மீண்டும் இதுபோன்று செயல்பட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.அனுமதியின்றி இயங்கிய பார் மூடப்பட்ட செய்தி அறிந்த தும் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இரவு நேரங்களில் சத்தம், தகராறு காரணமாக நடந்து செல்லவே முடியவில்லை.போலீசாரின் நடவடிக்கை யை வரவேற்கிறோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் பார் நடத்த அரசின் முறையான அனுமதி அவசியம். அனுமதியின்றி நடத்தினால், பார் உரிமையாளரகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் காரணமாக நேற்று இரவு குடியாத்தம்-வேலூர் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக