உலக திருவள்ளுவர் பேரவை சார்பில் முதன்மை விருது வழங்கும் விழா குடியேற்றம் லட்சுமி ஹயக்ரீவ மஹாலில் துவக்கம் !
குடியாத்தம், ஜூலை 11
வேலூர் மாவட்டம் குடியாத்தம் உலக திருவள்ளூர் பேரவை சார்பில் முதன்மை விருது வழங்கும் விழா குடியாத்தம் லட்சுமி ஹயக்ரீவ மஹாலில் நடை பெற்றது நிகழ்ச்சிக்கு உலக திருவள்ளு வர் பேரவை தலைவர் பொறியாளர் வைரஜே அன்பு தலைமை ஏற்றார் ,செயலாளர் பேராசிரியர் முனைவர் பா. சம்பத்குமார் வரவேற்புரை வழங்கினார் அரங்க ஜெயகுமார் பொருளாளர் நோக்க உரை வழங்கினார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் ரோட்டரி கவர்னர் ஒளிவண்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்
புலவர் பதுமனார்,நகரமன்ற தலைவர் சௌந்தராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் குடியேற்றம் சட்டமன்ற உறுப்பினர் சிந்து ,நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் விழாவில் சிறந்த திருக்குறள் ஆளுமை களுக்கான திருக்குறள் நன்மணி விருது ஆறு பேருக்கு வழங்கப்பட்டது குடியேற் றம் நகரம் ஒன்றியம் சுற்றி உள்ள 75 உயர்நிலை ,மேல்நிலை அரசு,அரசு உதவிபெறும் பள்ளி , தனியார் பள்ளி மாணவர்களில் பள்ளியளவில் முதல் நிலை இரண்டாம் நிலை பெற்ற 250க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் 100 சதவீத தேர்ச்சி பெற செய்த பள்ளி தமிழாசிரியர் களுக்கும் ,தலைமை ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது விழாவில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியை ஆசிரியர் ஜமுனா சம்பத் குமார் தொகுத்து வழங்கினார் விழா நிறைவில் ஆசிரியர் பா முகமது அலி நன்றி கூறினார் விழாவிற்கான ஏற்பாடுகளை உலக திருவள்ளுவர் பேரவை ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக