சுடுகாடு காரணம் காட்டி வழிப்பாதை அமைப்பு பொதுமக்கள் எதிர்பு தனிநபர் நிலங்களுக்கு பாதிப்பு ஊராட்சி முடிவை கைவிட கோரிக்கை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 24 ஜூலை, 2026

சுடுகாடு காரணம் காட்டி வழிப்பாதை அமைப்பு பொதுமக்கள் எதிர்பு தனிநபர் நிலங்களுக்கு பாதிப்பு ஊராட்சி முடிவை கைவிட கோரிக்கை !

சுடுகாடு காரணம் காட்டி வழிப்பாதை அமைப்பு  பொதுமக்கள் எதிர்பு தனிநபர் நிலங்களுக்கு பாதிப்பு ஊராட்சி முடிவை கைவிட கோரிக்கை !
குடியாத்தம்.ஜூல.24 
தனிநபர் நிலங்களுக்கு பாதிப்பு ஊராட்சி முடிவை கைவிட கோரிக்கை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கல்லப்பாடி ஊராட்சியில் சுடுகாட்டிற்கு செல்லும் வழி என காரணம் காட்டி அப் பகுதியில் உள்ள தனிநபர்களின் நிலங் களுக்கு வழிப்பாதை அமைக்கும் ஊரா ட்சி நிர்வாகத்தின் முடிவுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சுடுகாடு என்ற பெயரில் தனிநபர்களின் வீட்டு மனை மற்றும் விவசாய நிலங்கள் வழியாக புதிய வழிப்பாதை அமைக்கப் படுவதாகவும், இதனால் தங்களது தனியு ரிமை மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறி யாகி உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.மேலும் சுடுகாடு அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இடமே முரம்பு மற்றும் பாறைகள் நிறைந்த பகுதி இந்த இடத் தில் ஜேசிபி இயந்திரம் மூலம் தோன்டி னாலும் அந்த இடத்தில் பாறைகள் இருக்கும் என்பதால் அதனை மக்கள் ஏற்கனவே எதிர்து வரும் நிலையில், அதனை காரணம் காட்டி வழிப்பாதை அமைப்பது சரியல்ல என்றும் தெரிவித் தனர்.எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடி யாக வழிப்பாதை அமைக்கும் பணியை கைவிட்டு, பொதுமக்களுடன் கலந்து ஆலோசித்து மாற்று முடிவு எடுக்க வேண்டும் என அங்கு உள்ள பொது மக்கள் இந்த தகவலை கோரிக்கையாக விடுத்துள்ளனர்.

குடியாத்தம்.தாலுக்கா.செய்தியாளர்
கே.வி.ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad