காட்பாடி (கிறிஸ்தவ நிர்வாகம்) அக்சிலியம் கல்லூரியில் முத்தமிழ் விழா போட்டிகள் !
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, காந்திநகர்,(கிறிஸ்தவ நிர்வாகம்) அக்சிலியம் கல்லூரியில் 20.7.2026 முதல் 23.7.2026 வரை முத்தமிழ் விழா போட்டி கள் நடைபெற்றது. இவ்விழாவானது பாரம்பரிய உணவுகள் பாரம்பரிய உடைகள் பாரம்பரிய விளையாட்டுக்கள் பாரம்பரிய நடனம் எனும் அலைபேசியை விடுப்போம் அழகிய பாரம்பரியத்தை கையில் எடுப்போம் என்னும் பொருண் மையில் நடைபெற்று வருகிறது இந்த விழாவில் 23.7.2026 அன்று காலை பல்லா ங்குழி தாயம், கிட்டிப்புல் கல்லாட்டம், உறியடித்தல் பம்பரம், சைக்கிள் டயர் ஓட்டம், கோணிப்பை ஆட்டம், குடுவையில் நீர் நிரப்பும் ஆட்டம், மெதுவாக மிதி வண்டி ஓட்டுதல் என விளையாட்டுக்கள் நடத்தப்பட்டன இதனைத் தொடர்ந்து பிற்பகல் கோலாட்டம் ஒயிலாட்டம் கரகாட்டம் கும்மி என பாரம்பரிய நடனங் கள் மாணவிகளுக்கு போட்டிகளாக நடத்தப்பட்டது பாரம்பரியமும் கலாச் சாரமும் அழகாய் அணிவகுக்கும் இவ் விழாவிற்கு கல்லூரி செயல் முனைவர் அருட்சகோ ஆ. மேரி ஜோஸ்பின் ராணி ஆசியுரை வழங்கினார். கல்லூரி முதல் வர் முனைவர் அருட்சகோ.அ. ஆரோக்கிய ஜெய்சீலி வாழ்த்துரை வழங்கினார். துணை முதல்வர் முனைவர் அருட் சகோ அ. அமலா வளர்மதி துணை முதல்வர் முனைவர் க.அபிபியூலா ஆகியோர் முன்னிலை வகித்தனர் தமிழகத்து பாரம்பரியங்களை மீட்டெடுக்கும் சிறு முயற்சியான விழாவினை தமிழ் துறை தலைவர் முனைவர் கோ செந்தில்செல்வி அவர்களும் தமிழ் துறை பேராசிரியர்கள் அனைவரும் இவ்விழாவினை ஒருங்கி ணைப்பு செய்திருந்தனர். இவ்விழாவில் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவி களும், ஆசிரியை பெருமக்களும் கலந்து கொண்டு வெகு சிறப்பாக மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழுந்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக