காட்பாடியில் பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள் வழங்கல் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு !
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ் ச்சியில், காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்.சுதாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளை வழங்கினார். இந்த
நிகழ்ச்சியில் துயர் துடைப்பு வட்டாட்சியர் சந்தோஷ், சிறப்பு தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சிவகுமார், வட்ட வழங்கல் அலுவலர் லக்ஷ்மி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளை பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக