நீட் தேர்வை ரத்து செய் வடசேரியில் SFI, DYFI ஆர்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 24 ஜூலை, 2026

நீட் தேர்வை ரத்து செய் வடசேரியில் SFI, DYFI ஆர்பாட்டம்.

நீட் தேர்வை ரத்து செய் வடசேரியில் SFI, DYFI ஆர்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் - நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி SFI, DYFI மாவட்டக்குழுக்கள் சார்பில் வடசேரி ஜீவா திடலில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

SFI மாவட்ட செயலாளர் தோழர்.சந்துரு தலைமையில் நடந்த இந்த ஆர்பாட்டத்தை DYFI மாவட்ட துணைத் தலைவர் தோழர் காவ்யா துவக்கி வைத்து பேசினார்.

நிகழ்வில் DYFI நிர்வாகிகள் பிரவின், விபின் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக DYFI மாவட்ட செயலாளர்.விஷ்ணு நிறைவுரை ஆற்றினார்.

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழக குரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad