ஆழ்வார்திருநகரி கருட ஜெயந்தி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 22 ஜூலை, 2026

ஆழ்வார்திருநகரி கருட ஜெயந்தி.

ஆழ்வார்திருநகரி கருட ஜெயந்தி. 

ஸ்ரீவைகுண்டம் ஜுலை 23. தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் ஒன்பதாவதான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார்  கோவிலில் ஆடி ஸ்வாதி திரு நட்சத்திரத்தை முன்னிட்டு கருட ஜெயந்தி நடந்தது.  

கருடனுக்கு பிரார்த்தனையாக தேங்காய் உடடைப்பது. பால் குடம் எடுப்பது வழக்கம். பால் வியாபாரம் செய்யும் உள்ளூர்காரர்கள் பால் விற்பனை‌செய்யாமல் கருடன் அபிஷேகத்திற்கு கொடுப்பார்கள். 

கோவில் உள்ளே சன்னதி கருடன் மற்றும் வடக்கு மாடவீதி மதில் மேல் உள்ள கருடனுக்கும் பால், மஞ்சள், வாசனைத் திரவியங்கள் திரவியம்,  பஞ்சாமிர்தம், தேன், இளநீர் ,சந்தனம் அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை சாத்துமுறை நடைபெற்றது. 

பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. முடிவில் வேண்டுதலாக சுமார் 5000 தேங்காய் விடல் உடைக்கப்பட்டது. சுமார் 1500 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள்கண்ணன். விவேக் . சுவாதி.நிர்வாக அதிகாரி சதீஷ் ஆய்வாளர் நம்பி. அறங்காவலர் குழுத் தலைவர் கணேசன் உறுப்பினர்கள் ராமலட்சுமி காளிமுத்து பொன்ராஜ் கன்னிராஜ் ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad