ஆதார் அட்டையில் ஒரு எழுத்து திருத்தத் திற்குரூ.300 வசூல் குடியாத்தம் இ-சேவை மையம் மீது விசாரணை நடத்த பொது மக்கள் கோரிக்கை !
குடியாத்தம், ஆக. 8–
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் செயல் பட்டு வரும் ஒரு இ-சேவை தனியார் மை யத்தில், ஆதார் அட்டையில் முகவரியில் உள்ள ஒரு எழுத்தை மட்டும் திருத்துவதற் காக ரூ.300 கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.ஆதார் சேவைகளுக் கான கட்டணங்கள் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) நிர்ணயி த்துள்ள விதிமுறைகளின்படி வசூலிக்கப் பட வேண்டும். ஆனால், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக தொகை பெறப் பட்டதாக கூறப்படுவதால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன டியாக விசாரணை நடத்தி, விதிமுறை களை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தது உறுதி செய்யப்பட்டால், உரிய நடவடிக் கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், ஆதார் சேவைகளுக்கான கட்டண விவ ரங்களை அனைத்து இ-சேவை மையங் களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவும், கூடுதல் கட்டணம் வசூலிப் பதை தடுக்க கண்காணிப்பை தீவிரப் படுத்தவும் அவர்கள் வலியுறுத்தியுள்ள னர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி.ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக