காட்பாடி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இறங்க நினைத்த முதியவர் நிலை தடுமாறி பரிதாப பலி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

காட்பாடி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இறங்க நினைத்த முதியவர் நிலை தடுமாறி பரிதாப பலி !

காட்பாடி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இறங்க நினைத்த முதியவர்  நிலை தடுமாறி பரிதாப பலி !
காட்பாடி , செப்டம்பர் 13 -
              வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில்  ஓடும்  ரயிலில்  இருந்து இறங்க முயன்ற திருவண்ணா மலை
யைச் சேர்ந்த பயணி ஒருவர் நடை மேடைக்கும் ரயிலுக்கும் இடையே தவறி விழுந்து தலை துண்டாகி சம்பவ இடத் திலேயே உயிர் இழப்பு 
திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பெண்ணாத்தூர் அடுத்த நெடுங்கபூண்டி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 49). இவர் நள்ளிரவு தனது
மனைவி மற்றும் மகளுடன் காட்பாடியில் திருவண்ணாமலை - திருப்பதி மெமு பயணிகள் ரயிலில்  பயணம் செய்தார். இவர்கள் காட்பாடியில் இருந்து புறப்படும் சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆந்திர மா நிலம் கூடூர் செல்வதற்காக முன்பதிவு செய்திருந்தனர். இவர்கள் வந்த பயணி கள் ரயில் இரவு  காட்பாடி ரயில் நிலை யத்தின் 5-வது நடைமேடைக்கு வந்து நின்றது. பின்னர் அந்த ரயில்  நடை மேடையை விட்டு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. அப்போது இணைப்பு ரயிலைப் பிடிக்க வேண்டும் என்ற அவ சரத்தில் மெதுவாக நகர்ந்து கொண்டி ருந்த ரயிலில் இருந்து வெங்கடேசன் அவசரமாக கீழே இறங்க முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கால் இடறி நடைமேடைக்கும் ஓடும் ரயிலுக்கும் இடையேயான இடைவெளியில் அவர் விழுந்தார். இதில் ரயிலின் சக்கரம் ஏறியதில் வெங்கடேசனின் தலை துண் டாகி சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தார். கண்முன்னே கணவர் உயிரிழந்ததைக் கண்டு அவரது மனைவி யும் மகளும் கதறி அழுதது அங்கிருந்த பயணிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. தகவலறிந்த காட்பாடி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரயில்வே காவல் ஆய்வாளர் பத்மராஜா வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad