குடியாத்தத்தில் புதிய மனை விற்பனை அலுவலகம்: தொகுதி எம்.எல்.ஏ திறந்து
வைத்தார்!
குடியாத்தம் ,செப்டம்பர் 13 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட் டை காந்தி ரோடு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள புதிதாக அமைக்கப் பட்டுள்ள எம்.எஸ்.கிரீன்லாந்து பிராப்பர் டீஸ் நிறுவனத்தின் மனை மற்றும் விவ சாய நிலங்கள் விற்பனை மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைமை அலு வலகத் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு நிறு வனத்தின் உரிமையாளர் எச். மொஹிய தீன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந் தினராக கலந்துகொண்ட குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிந்து அழகப்பன் எம்.எல்.ஏ குத்துவிளக்கேற்றி, ரிப்பன் வெட்டி புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர், இப் பகுதியில் பெருகி வரும் மக்கள் தொகை க்கு ஏற்ப, பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான வீடு மற்றும் மனைகளை சட்டப்பூர்வமாகவும், நம்பகத்தன்மையுட னும் வாங்குவதற்கு இந்த நிறுவனம் பயனுள்ளதாக அமையும் என வாழ்த்தி னார். இவ்விழாவில் தவெக கட்சியின் மாவட்ட மகளிர் இணை அமைப்பாளர் சவிதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள், வணிகர்கள், நிறு வனப் பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவின் நிறைவாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப் பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக