வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி ஆணையாளரின் இருக்கையில், த.வெ.க எம்.எல்.ஏ சிந்து ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 21 மே, 2026

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி ஆணையாளரின் இருக்கையில், த.வெ.க எம்.எல்.ஏ சிந்து !

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி ஆணையாளரின் இருக்கையில், த.வெ.க எம்.எல்.ஏ சிந்து !
குடியாத்தம் ,மே 21-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையரின் இருக்கை யில் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் இவர் வாக்கு சேகரிக்க தொகுதி முழுவதும் செல்லவில்லை வெற்றி பெற்ற பின் நன்றி தெரிவிக்கவும் செல்லவில்லை என தொகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் இந்த நிலை யில் எம்.எல்.ஏ சிந்து குடியாத்தம் பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு நேற்று சென்றார். அப்போது நகராட்சி கமிஷனர் அறைக் குள் சென்று அவரது இருக்கையில் அமர்ந்துள்ளார். பின்னர் நகராட்சி ஆணையாளர் தனலட்சுமியை  இன்னொரு நாற்காலில் அமர வைத்து விட்டு என்ன வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என கேட்டுள்ளார்.இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது எம்.எல்.ஏ நகராட்சி ஆணை யாளரின் இருக்கையில் அமரக்கூடாது என்று சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நகராட்சி சட்டத்தின்படி நகராட்சி கமிஷனர் தான் நகராட்சியின் நிர்வாகத் தலைவர். சட்டமன்ற உறுப்பினருக்கு நகராட்சி கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர் அந்தஸ் துதான்.சட்டமன்ற உறுப்பினர், கமிஷனர்
அறையில் அவரது தலைமையில் கூட்டம் நடத்தலாம். ஆனால் கமிஷனர் நாற்காலி யில் அமரக்கூடாது. மக்கள் பிரச்னைக ளை கமிஷனரிடம் தெரிவிக்கலாம். இதுபோன்ற செய்வது சட்டப்படி தவறு, அதிகார துஷ்பிரயோகம் என்பது உள்ளிட்ட கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக குரல் செய்தியாளர் மு. பக்கியராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad