இருசக்கர வாகன விபத்து மருத்துவ மனையில் அனுமதி ! மூளை சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம்!
திருவண்ணாமலை , மே 22 -
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் வசித்து வந்த மதன் குமார் (வயது36) குப்பன்ராஜ், நெடுஞ்சாலைத் துறையில் தட்டச்சுப் பணியாளராகப் பணிபுரிந்து வந்தார் . அவர் மே மாதம் 17 அன்று இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது எதிர்பாராத விதமாக சறுக்கி கீழே விழுந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தி னர் மீட்டு வேலூர் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது மேலும் சிகிச்சை பலனின்றி , மே 21 அன்று இரவு 7 மணிக்கு அவர் மூளைச் சாவு அடைந்த தாக அறிவிக்கப்பட்டார். அவருடைய உடல் உறுப்புகள் தானம் செய்ய குடும்பத் தினர் முன்வந்தனர் குடும்ப உறுப்பி னர்களின் விருப்பத்தின்படி அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப் படுகின்றன. கண்கள் ராணிப்பேட்டை கேம்பஸ் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி க்கும் வலது கிட்னி ஸ்ரீ நாராயணி மருத்துவமனைக்கும் இடது கிட்னி ராணிப்பேட்டை கேம்பஸ் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது அவரது மனைவி பரிமளா ஒரு இல்லத்தரசி. அவருக்கு ஏழு வயது டைய ஒரு மகளும், நான்கு வயதுடைய ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பி டத்தக்கது அப்பகுதியில் பொதுமக்கள் அனைவரும் ஆழ்ந்த துக்கம் தெரிவித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக